பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சென்னைக்கு வந்து சிவ மானேன்!' அத்தக் கட்டுரை காந்தியில் வெளிவந்தது. இந்தக் கட்டுரை பின் மூலம்தான் டி. எஸ். சொக்கலிங்கத்துக்கும் புதுமைப் பித்தனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. வ. ரா. இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, புதுமைப்பித்தனைப் பாராட்டி ஒரு கடிதமும் எழுதிவிட்டார். அதுமுதல் புதுமைப்பித்தனுக்கும் வ. ரா. வுக்கும் கடிதப் போக்கு வரத்து ஏற்பட்டது. காந்தியில் எழுதியதுபோலவே புதுமைப்பித்தன் மணிக்கொடியிலும் கதைகள் எழுத ஆரம்பித்தார். 'கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே. இதுதானய்யா பொன்ன கரம்!' என்றுகூறி அம்மாளுவை அறிமுகப்படுத்திவைக் கும் 'பொன்னகரம்', 'என்னை என்ன பிச்சைக்காரின்னா தினச்>ே?', என்று கேட்கும் 'தொழில் யுவதிக் கதைாேன.

  • கவந்தனும் காமனும்', சொந்த மனைவியிடமே விபசாரம்

புரிந்து, விட்டுப்போன, தெம்பும் திராணியுமற்ற கோழைப் பிறவி சீமாவை அறிமுகப்படுத்தும். 'ஆண்சிங்கம்' முதலிய கதைகள் - எல்லாம் மணிக்கொடியில் வெளிவந்தன. கதைகள் வெளிவந்த காலத்திலேயே - புதுமைப்பித்தன் இலக்கிய உலகில் ஒரு விவாதப் பிரச்னையாகி விட்டார். சிலர் புதுமைப்பித்தனது சிருஷ்டிகளைக் கண்டு மிரண்டு நடுங்கினார்கள்; சிலர் அவரது சிருஷ்டிகளின் அசாதார எனத் தன்மை , அக்னி வேகம், புதிய கோணம் முதலியவற் றைக் கண்டு பாராட்டினார்கள். புதிய இலக்கிய கர்த்தாக்களின் மத்தியில் புதுமைப் பித்தன் தனித்ததொரு பரிதி வட்டம்போல் விளங்கினார் . சந்திர வளையமாக அல்ல. சந்திரனாக இருந்தால், தாரகை மண்டலமும் தெரியும். புதுமைப்பித்தன் தம்மைச் சுற்றி யுள்ள மினுக்கு நட்சத்திரங்களை ஒளியற்றுப்', 'போகச் செய்யும் பரிதியொளி : போலத் திகழ்ந்தார். இதனால் புதுமைப்பித்தன் , என்ற பெயர் இலக்கிய வட்டாரத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது. 'புதுமைப்பித்தன் என்பவர் யார்? யார்?' என்ற கேள்வி இலக்கிய ஆசிரியர் கனின் மந்திர கோஷமாக ஒலித்தது.