பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சென்னைக்கு வந்து சிவமானேன்! 35 கொண்ட புதுமைப் பித்தனோ ' அல்லது மணிக்கொடி நிர் வாகஸ்தர்களோ இதைப்பற்றிக் கவலைப் படவில்லை. 'பசிர்ந்து உண்டால் பசியாறும்' என்ற சமதர்மக் கொள்கை அவர்களது நடைமுறையாயிருந்த போதிலும், பகிர்ந்து கொள்வதற்கோ பசியைத் தவிர வேறு எதுவும் அவர்க ளிடம் இருக்கவில்லை. புதுமைப்பித்தன் சென்னைக்கு வந்து சேர்ந்த வைப் வத்தைப் பற்றி வ. ரா. பின்வருமாறு என்னிடம் சொன்னார்;

    • ஆசாமி திடீரென்று ஒருநாள் வந்து நின்றார்,

எங்கள் நிலைமைதான் தெரியுமே. தள்ள முடியுமா? வந்த வருக்குக் கைச்செலவுக்காக இரண்டு ரூபாய் கொடுத்தோம். செலவு என்றால் மேல் செலவுக்கா? சாப்பாட்டுச் செல் வுக்கு, மனுஷன் என்ன செய்தார் தெரியுமோ? வெளியே போனார். திரும்பி வரும்போது மூர்மார்க்கெட்டுப் பழைய புஸ்தகக் கடையில் ஒண்ணேகால் ரூபாய்க்கு மாப்பஸான் கதைப் புஸ்தகம், மீதிக் காசுக்கு ஸ்பென்ஸர் சுருட்டு, இவற்றை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார், 'என்ன வோய், இப்படிப் பண்ணினீர்? செலவுக்கு என்ன பண்ணு வீர்?' என்று கேட்டேன். அதைப் பற்றி அவர் கவலைப் படவில்லை. பேசாமல் சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு வாங்கி வந்த புஸ்தகத்தைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்.” புதுமைப் பித்தனின் சென்னை வாழ்க்கை இப்படித் தான் ஆரம்பமாயிற்று.