பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் இத்தனை பேர்களும் அன்றாடம் காய்ச்சிகளைப் போலத் தான் வாழ்ந்து வந்தார்களேயன்றி, , “மாத்தைப் படி' என்று வாங்குவதற்குரிய நிலைக்குத் தக்கவாறு மணிக் கொடி உயரவேயில்லை. இருந்தாலும் இவர்கள் அனைவ ருக்கும் ஆர்வத்துக்குக் குறைச்சலில்லை. இலக்கியத்தைப் புதிய வழியில் எப்படியேனும் கைதூக்கி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டார்கள். இதன் காரண மாக போட்டிப் பரிசு எல்லாம் வைத்தார்கள். பகுத் தறிவுப் போட்டியல்ல! பகுத்தறிவுப் போட்டிக்கு - மணிக் கொடிக்காரர்கள் பரம எதிரிகள். இந்த எதிர்ப்பின். காரணமாக 'ஆனந்த விகடனில் அப்போது ஆசிரியராக இந்த 'கல்கி'க்கும் மணிக்கொடி எழுத்தாளர்களுக்கும் காரசாரமான கடிதப் போக்குவரத்தும் கட்டுரைச் சண்டைகளும் நடைபெற்றன. அது ஒரு தனிக் கதை. மணிக்கொடியாளர்கள் வெளியிட்ட போட்டி - கட்டுரைப் போட்டி; கதைப் போட்டி, மணிக்கொடியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் தங்கள் சொந்தப் பணத்தி லிருந்து சிறு சிறு தொகையையும் பரிசளிக்க முன் வந்தார் கன், ஒரு சிறு கதைப் போட்டித் திட்டம் வெளிவந்தது. ‘நெருக்கடியான நிலைமையில் 'சக்தியை எப்படி வளர்ப்பது?' என்பது கதையின் - கருத்தாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. பரிசு ரூபாய் பத்து! இந்தப் பரிசுத் திட்டத்தில் வெற்றி பெற்றார் ஒருவர் . 'சோதனை' என்ற கதையை எழுதி, பரிசைத் தட்டிக் கொண்டுபோன , அந்தக் . 'கதாசிரியர் தான் ஆதிகுடி. கீர், நீராமச்சந்திரன் என்பவர்; விளங்கும்படிச் சொன்னால், இன்று 'ஜெமினி' கதை இலாகாவில் ஒருவராக இருக்கும் கி. ராமச்சந்திரன் என்னும் கி. ரா', மற்ற போட்டித் திட்டங்களில் யார் யார் பரிசு பெற்றார்கள், போட்டி நடந்ததா முடிந்ததா என்பதெல்லாம் மணிக்கொடியாளர் களுக்கே தெரியாத விஷயங்கள், மணிக்கொடியின் பொறுப்பாளர்கள் என்னென். னவோ வித்தைகள் செய்தும் பத்திரிகையின் நிலைமை, அதாவது ஜீவாதாரமான நிதி நிலைமை சரிப்பட்டு வரவே