பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-அத்தியாயம்-10 தின மணியும், திாைசசி மேடம் சொக்கலிங்கத்தின் விருப்பப்படியே புதுமைப்பித்தன் தினமணியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். தினமணியில் சேரும்போது புதுமைப்பித்தனுக்கு மிகவும் குறைந்த சம்பளம்; விலகும் காலத்திலும் அவரது வருமானம் அப்படியொன்றும் அதிகமில்லை, - தேவைக்குக் காணாத சம்பளம். எனவே புதுமைப்பித்தன் தினமணியில் ஸ்திரமான ஸ்தானத்தைப் பெற்றிருந்தார் என்பதைத் தவிர குறிப்பிடத்தக்க வாழ்க்கை வசதிகள் எதுவும் அவருக்குக் கிட்டவில்லை. மணிக்கொடி சேவையின்போது 'அடுத்த வேளைச் சாப்பாடு எங்கே?' என்று தெரியாத நிலையிலிருந்த புதுமைப்பித்தன், தின மணி சேவையின்போது 'குறை மாதத்தையும் எப்படிப் போக்குவது' என்ற நிலையில்தான் இருந்தார். செலவுக்குக் கட்டாத வருவாய், அசுரப் பசி கொண்ட தினசரிப் பத்திரி கையின் நித்திய கருமமான தர்ஜுமாத் தொழில் இரண்டும் 4.துமைப்பித்தனின் சிருஷ்டி சக்தியைப் பேரளவில் கட்டிப் போட்டிருந்தன என்றே சொல்ல வேண்டும், மணிக்கொடிக் காலத்தில் அசுரவேகத்தில் இலக்கியம் படைத்த , புதுமைப்பித்தனின் பேனா, 'அஸோஸியேட் டெட் பிரஸ்.' 'ராய்ட்டர்' தந்திகளைத் தமிழர்க்கும் காரி மத்தில் சிக்கித் தவித்தது. இருந்தாலும், தினமணி பத்திரிகையின் வருஷாந்திர மலர்கள் அனைத்தும் புதுமைப்பித்தனின் மேற்பார்வையில் புதுமைப்பித்தனின் சிருஷ்டிகளையும் தாங்கி வெளி வந்தன * நினைவுப்பாதை'