பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் போன்ற உயர்ந்த கதைகள் அக்காலத்துப் படைப்புக்கள் தாம். தின மணியின் மதிப்புரைப் பகுதியில் புதுமைப்பித்தனின் நக்கீர அவதாரத்தை வாசகர்கள் காண முடிந்தது; புத்தகா சிரியர்கள் கண்டு, 'அஞ்சுவ தஞ்சி* அடங்க முடிந்தது. இந்த அவதாரத்தின் விஸ்வரூப தரிசனத்தை , * ரசமட்டம்' என்ற புனைபெயரில், புதுமைப்பித்தன் 'கல்கி' ஆசிரியரோடு நடத்திய கட்டுரைப் போரின்போது வாசகர்கள் காண (1டிந் தது. 'ரசமட்ட' த்தின் விமர்சனம் தமிழ் நாட்டு வாசகர் களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கி விட்டது. 1943-ம் வருஷத்தில், தினமணி ஆசிரியர் சொக்கலிங்கத் துக்கும் தினமணி நிர்வாகஸ்தர்களுக்கும் நடந்த உரிமைப் போராட்டத்தின் பலனாக, தினமணி ஆசிரியரும் ஆசிரியர் குழாத்தில் பலரும் தினமணியை விட்டு வெளியேறிய ராஜி நாமாக் கதை பிரசித்த சம்பவம், சொக்கலிங்கத்திட்டம் பெரு மதிப்பு வைத்திருத்த புதுமைப்பித்தனும் தமது ஆசிரியரும் னேயே வெளியேறினார்.. 1944-ம் வருஷத் தொடக்கத்தில் சொக்கலிங்கத்தில்

  • தினசரி!' பத்திரிகை ஆரம்பமாயிற்று; புதுமைப்பித்தனின்

வாழ்க்கையிலும் மற்றொரு புதிய கட்டம் தொடங்கியது. பற்றாக் குறைச் சம்பளம் பெற்று வந்த புதுமைப்பித்தன் தினசரியில் நியாயச் சம்பளம் பெற ஆரம்பித்தார். உரிமைப் போராட்டத்தின் காரணமாக வெளிவந்த பத்திரிகாசிரியர் களின் கூட்டு ஸ்தாபனம்போல் விளங்கி வந்த தினசரி, தொழில் லாளர்களுக்கு நியாயச் சம்பளம் கொடுக்க முன்வந்தது. ஆனால் மணிக்கொடியில் வரும்படியே இல்லாது கதைகள் எழுதி வந்த காலத்தில், புதுமைப்பித்தனுக்கு ஆத்ம திருப்தி யாவது அருந்தது; தினசரியில் தேவைக்குப் போதுமான வருவாய் இருந்த போதிலும், அவருக்கு ஆத்ம திருப்தி அற்றுப் போய்விட்டது. அதனால்தான் அவர் தினசயிலிருந்தும் விலகினார். தினசரியிலிருந்து - விலகிய பின்னர் சிலகாலம் கழித்து