பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினமணியும், தினசரியும் 51 சினிமாத்துறையில் புகுந்தார். பத்து வருஷ காலத்துக்கு மேலாக, பத்திரிகைத் தொழிலில் பழகிய பின்னர், நல்ல வருமானமும் . நிரந்தர ஸ்தானமும் உள்ள பதவி பெற்ற பின்னர், அதை ஏன் உதறிட்டு வெளியேறினார் என்பது அவர்து நண்பர்கள் பலருக்குமே ஆச்சரியமாய்த் தானிருந்தது, அதைப்பற்றி அவரிடம் யாராவது கேட்டால் நானும் பத்து வருஷமாய்ப் பத்திரிகைத் தொழிலில் செத்தேன், ஒன்றும் மிச்சத்தைக் காணோம். எனக்கு ஒரு பெண்டாட்டி இருக்கிறாள்; பிள்ளை , இருக்கிறது. சினிமாத் துறையில் இறங்கினால் ஏதாவது மிச்சம் பார்க்கலாம் என்று விலகினேன் என்று சொல்வார். இது பொய்யல்ல; உண்மைதான். புதுமைப்பித்தனோடு உழைத்த பல. எழுத்தாளர்களும் சினிமாத் துறையில் புகுந்து நல்ல முறையில் சம்பாத்தியம் செய்து கொண்டிருந்தார்கள்

  • இளங்கோவன்' பிரபல்' வசனகர்த்தா என்று பெயரெடுத்துச்

விட்டார்; பி. எஸ். ராமையா வசனகர்த்தாவாக மட்டுமல்லா மல், சினிமா டைரக்டராகவும் மாறிவிட்டார்; கி. ரா; ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்து விட்டார். என்னிடம் 'திறல்:20 இருக்கிறது. சந்தர்ப்பத்துக்காகக் - காத்துக் கொண்டிருப் பானேன்? சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொள்வதே நல்லது' என்று புதுமைப்பித்தன் எண்ணியிருக்கலாம். மேலும், அவரது மனைவி கமலாம்பாளும்" * கணவன் நன்றாகச் சம்பாதிக்க வேண்டும்; இத்தனை காலமாகப் பட்ட கஷ்டத்துக்கு இனி மேலாவது சுகம் பிறக்க வேண்டும்' என்று கருதியிருந்தாலும், அதுவும் லௌகிக சுபாவத்துக்குப் புறம்பானதல்ல. எனவே புதுமைப்பித்தன், கூறிவந்த காரணம் உண்மையாக இருக்க முடியும். ஆனால் அது முழு உண்மை அல்ல. தினமணியில் சேர்ந்த காலத்திலிருந்து புதுமைப்பித்த னுக்குச் சொக்கலிங்கம் பிள்ளையிடம் பெருமதிப்பு. அவருக் கும். இவரிடம் நிறைந்த ஈடுபாடு. புதுமைப்பித்தனின் மேதையை அவர் நன்கு உணர்ந்து, அவருக்குத் தம் மனசில் மட்டுமல்லாமல், எழுத்துச் சுதந்திரத்திலும் அவருக்கு நல்ல ஸ்தாளமே கொடுத்திருந்தார். ஆசிரியருக்கும் உதவியாசிரி