பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் இருக்கும் இருந்த ஓட்டுறவு குடும்ப ஒட்டுறவு போன்றிருந்தது, இரு வீட்டுப் பெண்களும் கூட அப்படித்தான் பழகினார்கள், புதுமைப்பித்தனின் மனைவி கமலாம்பாள் சொக்கலிங்கம் பிள்ளையை 'அப்பா' என்று அழைப்பது வழக்கம், அத்தனை செளஜன்யம். அதனால்தான் கொள்கை வேறுபாடு, உரிமைப் போர் முதலிய காரணங்களால் சொக்கலிங்கம் பிள்ளை தின் உம்ணியை விட்டு விலக : முனைந்தபோது, " புதுமைப்பித்தன் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு முன்னணியில் நின்றார்.

  • ஆசிரியருக்காக எதுவும் செய்யலாம். அது கடமை' என்று

தான் புதுமைப்பித்தன் கருதினார்; வெளியேறினார்." தமிழில் இரண்டு பழமொழிகள்: ‘பழகப் பழகப் பாலும் புளிக்கும்'; மாங்காய் புளித்ததோ, வாய் புளித்ததோ'. இரண் லடயும் ஒட்டவைத்து விசாரித்தால், ஒரு உண்மை புலப்படும். பால் புளிப்பதாகத் தோன்றுவதற்குப் பழக்கம்தான் காரணம் என்ற நியதி இல்லை; நாக்கும் புளித்திருக்கலாம். புதுமைப் பித்தன் தினசரியில் சேர்ந்த பிறகு, அவருக்கும் சொக்கலிங்கத் துக்கும் இடையில் நிலவிய இனிமை புளிப்புக் கண்டுவிட்டது. புளிப்புக் கண்டதற்குக் காரணம் பழக்க தோஷம் இல்லையென்ன் கொண்டாலும், யாருடைய உணர்ச்சியில் புளிப்புத் தட்டியிருந் தது என்பதை அறிவதோ ஆராய்வதோ ரச விகாரத்துக்குரிய விஷயம்; வேண்டாத விஷயம். தினசரியின்துணையாசிரியர் ரா. வேங்கடராஜுலு நாயுடு வுக்கும் புதுமைப்பித்தனுக்கும் சௌஜன்யத் தொடர்பில்லை. புதுமைப்பித்தனோடு எந்தவித சுமுக பாவம் கொண்டிருந் தாரோ, அதே சுமுக பாவத்தோடு சொக்கலிங்கம் நாயுடு வோடும் பழகி வந்தார். இந்த நிலையில் புதுமைப்பித்த னுக்கும் ஆசிரியர் சொக்கலிங்கத்துக்கும் இடையே நிலவிய உறவு கிரிச்சிட்டது. சாதரணமாக இரண்டு நபர்களுக் கிடையில் நிலவும் சுமுக பாவத்தைக் கரகரக்கச் செய்வது மூன்றாவது சக்தியாகவே இருப்பது உலக வழக்கு. புதுமைக் பித்தனின் வாழ்க்கையில் நான்காவது சக்தியொன்றும் குறுக் கிட்டது.