பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைப் பத்திரம் 53 செய்து விடாமல், ஒரு ஜீப் கார் வாங்கி வாடகைக்கு விடச் சொன்னார். அப்போது யுத்தம் முடிகின்ற அல்லது முடிந்துவிட்ட பருவம். சரசமான விலைக்கு உறுதியான ஜீப் கார்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. எனவே அப்படி ஒன்று வாங்கினால் ஏதாவது பிரயோஜனகரமாய் இருக்கக் கூடும் என்பது அவர் எண்ணம், ஆனால் அதற்குப் புதுமைப்பித்தன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

  • ஜீப் வாங்குவதில் ஆட்சேபணை இல்லை, ஆனால்,

ஒரே ஒரு நிபந்தனை; வாங்கியவுடனேயே அதை என் அப்பா மேலேதான் விடுவேன். சம்மதமா? இந்தப் போக்கிரித்தனமான பதிலைக் கண்டு.. 'சுப்பிச'. மணிய பிள்ளை என்ன செய்வார்? பேசாதிருந்து விட்டார், புதுமைப்பித்தன் தினசரியை விட்டு விலகி வேலை யில்லாதிருந்த காலத்தில் அவருக்கு ஓரளவு உதவி வந்தது இந்தப் பணம்தான். ஆனால், சம்பாத்தியமே இல்லாது கைமுதலைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைத்துக் கொண்டு, அதிலும் யுத்தகால வாழ்க்கைத் தரத்தின் சங்க படங்களோடு, சென்னை நகரில் குடியிருந்தால், அந்த வாழ்க்கை எத்தனை நாளைக்கு ஓடும்? எனவே புதுமைப்பித்தன் தமது எதிர்காலத்தைப் பற்றி விசாரப்பட வேண்டிய நிர்ப்பந்தம் நெருங்கிப் படி முறுத்தியது. . - -