பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-12 கூலா ஜ்வா, இலக்கியமா? 46ஒன்னுடைய கதைகள்................ பிற்கால நல்வாழ் வுக்குச் சௌகரியம். பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் கரற்பாடும் அல்ல” என்று புதுமைப்பித்தன் ‘காஞ்சனை என்ற . கதைத் தொகுதியின் - முன்னுரையில் கூறியிருக் கினர். அவரது கதைகள் மனித குலத்தின் பிற்கால நல் வாழ்வுக்குச் சௌகரியம் செய்யுமோ, இல்லையோ?' அது வேறு விஷயம். ஆனால் அவரது கதைகள், . அவர் புரிந்து வந்த இலக்கிய சேவை, பத்திரிகைத் தொழில் - எதுவுமே அவரது பிற்கால நல்வாழ்வுக்கான எந்தச் சௌகரியத்தையும் செய்து வைக்கவில்லை. தினமணி, தினசரி ஆகிய பத்திரிகை களில் தர்ஜுமாக் கூலியாக, உதவியாசிரியராக உழைத்து, அவரது உள்ளமும் உடலும் சோர்ந்து போய்விட்டன. பதினோரு வருஷ காலப் பத்திரிகைத் தொழிலுக்குப் பிற கும், அவருக்கு அடுத்தாற்போல் என்ன செய்வது, 'அதா வது பிழைப்புக்கு என்ன செய்வது என்பதுதான் பிரச்னை யாக நின்றது. இனி என்ன செய்தால் தமது பொருளா தார நிலை உயரக்கூடும் என்பதே அவர் சிந்தனை. சிந்தித் ததில் ஆச்சரியமில்லை; குற்றமும் இல்லை; தவறும் இல்லை, அவருக்குத் தெரிந்த தொழிலோ' இலக்கிய சிருஷ்டி., அதற்குரிய சாதனம் பத்திரிகை. தமிழ் நாட்டில் சுயேச்சை எழத்தாளனாக இருந்து வயிற்றுப் பிரச்னை யைக் கழுவி விடலாம் என்று ஒரு நல்ல எழுத்தாளன் நம்புவது அன்றும் இன்றும் நடவாத காரியம்; நம்புவது முட்டாள்தனம், புதுமைப்பித்தன். புத்திசாலியாகத்தான்.