பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல் இழுத்து மறுமலர்ச்பிவிட்ட" புதுமைப்பித்தன் கோபால் நாயுடுவின் விஷயம் திரிசங்கு நிலையாகிவிட் டது . அதற்குக் காரணம் நாயுடுவல்ல; புதுமைப் பித்தன்தான்! சினிமா டைரக்டர் 'முருகதாஸா' (ஒ. முத்துஸ்வாமி) அப்போது ஜெமினி ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார். 12றுமலர்ச்சி இலக்கியத்திலும், மறுமலர்ச்சி இலக்கிய கர்த்தாக்களிடமும் அவருக்கு ஈடுபாடு உண்டு, இன்று ஜெமினி கதை இலாகாவிலிருக்கும் கி. ரா", , வசன கர்த்தாவாகவும் டைரக்டராகவும் மாறிவிட்ட பி. எஸ், ராமையா. போன்ற * - மறுமலர்ச்சி எழுத்தாளர்களைச் சினிமாத் துறையில் இழுத்து விட்டவர் அவரே. புதுமைப் பித்தனின் சிருஷ்டிகளில் 'முருகதாஸா'வுக்கு அமோகக் கவர்ச்சி'; ஈடுபாடு. கி. ரா. புதுமைப்பித்தனோடு மணிக் கொடி என்ற சத்திய சோதனைக் காலத்தில். பசியையும் பட்டினியையும் பகிர்ந்து கொண்ட நண்பர்களில் ஒருவர். எனவே புதுமைப்பித்தனுக்கு ஜெமினி ஸ்டூடியோவி' எலிருந்து அழைப்புக் கிடைத்ததில் வியப்பில்லை, எஜமி..சியில் அவ்வையார் சரித்திரத்தைப் படமாக்கத் திட்டமிட்டார் கள். புதுமைப்பித்தனை அவ்வையார் படத்துக்கு கதை வசனம் எழுத அழைத்தார்கள். கி. ரா. வும். புதுமைப் பித்தலுமாகச் சேர்ந்து எழுதுவதாகத் திட்டம். ஜெமினி மியில் புதுமைப்பித்தனுக்கு ஒப்பந்தமும் ஆயிற்று, ஜெமினி ஒப்பந்தத்தின் மூலம் புதுமைப்பித்தனுக்குக் கிடைத்த தொகை, பெருந்தொகை என்று சொல்ல முடியாது. என்றா மும், புதுமைப்பித்தனை இரண்டு விஷயங்கள் மயக்கின, ஒன்று: அவ்வையாரின் சரித்திரத்தை எழுத நேர்ந்ததில் ஒரு திருப்தி; பிடித்தமான விஷயம் என்ற ஆத்ம சாந்தி. இரண்டு: ஜெமினரி 'ஸ்டூடியோ நல்ல ஸ்தாபனம்; முன் போற்றத்துக்கு வழி உண்டு என்ற நம்பிக்கை. இத்தனைக் கும் மேலே தேவை என்ற நிர்ப்பந்தம். புதுமைப்பித்தன் அவ்வையை உருவாக்குவதில் பெருமகிழ்ச்சி கொண்டார், இதன் காரணமாகத்தான் பாலகோபால் நாயுடுவின், 'கதை. திரிசங்கின் அதியை அடைந்தது.

  • அவ்வைக்குக் கதை வசனம் எழுதும்போது நான்

புதுமைப்பித்தனுடன் இருந்தேன்; அவ்வப்போது தாம்