பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-14 பாதகுமாரி பர்வதம் என்ற சொல் புதுமைப்பித்தனுக்குப் புனித மான திரு நாமம்; பக்தி மயமான பெயர். காரணம், அது அவரது தாயின் பெயர். தந்தையின் உதாசீளத்துக்கும் சித்தியின் எதேச்சாதிகாரத்துக்கும் ஆளாகி அவதிப் பட்ட புதுமைப்பித்தன் தம்மை இளவயதில் விட்டுவிட்டு ANறைந்து சென்ற தம் தாயின் நினைவையும், தாய் இல்லாத குறையையும் வாழ்நாள் முழுவதும் தெஞ்சில் வளர்த்து வந்ததில் ஆச்சரியமில்லை. எனவேதான் அவர் விட்டுச் சென்ற தமது ஒரே ஒரு குழந்தையான தினகரிக்கு, தமது தாயின் பெயரையும் சூட்டியிருந்தார். தினகரியின் மற் றொரு பெயர் பர்வதகுமாரி. இந்த அத்தியாயத் தலைப்பு தினகரியைக் குறிப்பிடவில்லை; இது வேறு. பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்! 'பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்' என்பது புதுமைப் பித்தன் ஆரம்பித்து நடத்துவதாக இருந்த சினிமாக் கம் பெனி, தினகரி பிறந்த அதே ஆண்டில், அதாவது 1946-ம் வருஷத்தில், புதுமைப்பித்தன் ' ஒரு 'புரொடக்ஷன்ஸ்" ஆரம்பித்தார், 'சினிமாத் துறையில் ; புகுந்த ஒரே வருஷ காலத்தில் புதுமைப்பித்தன் சொந்தத்தில் கம்பெனி ஆரம் பித்தாரா? அவ்வளவுக்கு அவரது பணவசதி உயர்ந்து விட்டதா? புதுமைப்பித்தன் - முதலாளியானாரா?' 'என் றெல்லாம் ரசிகர்களும் நண்பர்களும் மூக்கின்மீது விரலை னவத்துக் கேட்கக் கூடும்,