பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து தங்கமப்பித்தனை ஆவியாகவும், பர்வதகுமாரி குட்டித் தேவதைகளின் சிநேகம் கிட்டியது. கூளிக்கணங் கள் போல, அவர்கள் புதுமைப்பித்தனைச் சுற்ற ஆரம்பித் தார்கள், மேற்கூறிய ஆசைக்கு அடிமையான இந்தத் தேவதைகள் புதுமைப்பித்தனையும் காலக்கிரமத்தில் “ஞானஸ்நானம்' செய்து தங்களோடு சேர்த்துக் கொண் டது மட்டும் அல்லாமல், புதுமைப்பித்தனையே தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்துவைக்க முன்வரும் கருவியாகவும் பயன்படுத்தி விட்டார்கள். 'அன்பர் பணிக்குத் தம்மை ஆளாக்கி விட்டு விட்ட? புதுமைப்பித்தனும் எப்படியோ இந்தச் சூதாட்டத்தில் சிக்கினார்; சீரழித்தார்... ‘ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது' என்பது பழ மொழி. ஆண்டிகளின் - திருக்கூட்டம் உஞ்ச விருத்திக் காகக் கலைந்து செல்லும்போது, அந்த மடமும், காற்றிலே பிறந்தது போலவே காற்றிலேயே மறைந்துவிடும். பர்வத குமாரி புரொடக்ஷன்ஸ் ஆண்டி மடXமாகப் போயிருந்தால் அதிசயப்படுவதற்கோ, வருத்தப்படுவதற்கோ இடமில்லை, புதுமைப்பித்தனோ எப்பாடு பட்டேனும் மடத்தை உரு வாக்கியே தீருவது என்று தீர்மானித்தார். ஆனால் அஸ்தி வாரம் வேண்டாமா? படம் எடுக்கப் பணம் வேண்டும். 4.ணத்துக்காகப் புதுமைப்பித்தனும் அவரது .பரிவாரங் களும் அலைந்தார்கள். சிக்கந்திராபாத், திருநெல்வேலி, திருவனந்தபுரம்--இப்படி எத்தனையோ ஊர்கள் அவர் களது இலக்காயின. ஆனால் இங்கெல்லாம் செல்வதற்குப் பணம் வேண்டுமே! புதுமைப்பித்தன் தமது சினிமா உலகப் பிரவேசத்தால் ஏதோ மிச்சம் கண்டிருந்த பணம் இதற்குப் ' பயன்படுத்தப் பட்டது. பணம் விரயமானது தான் மிச்சம். கைப்புறாவும் பறந்தோடி விட்டது; மணிப் புருவும் அகப்படவில்லை. 'எனது: ' தண்பர் ஒருவர் சொல்வார்: 'பிளேக் கிருமிகள்கூட, மனிதன் செத்த பிறகு அவனிடமிருந்து ஓடிப்போய்விடும். சில மனிதர்கள் அப்படியல்ல, அவன் உயிரோடிருக்கும்போது.. அவனைத் தின்று கொண்டிருப் பார்கள்; செத்த பிறகும்கூட அவனை விடமாட்டார்கள்.* புதுமைப்பித்தனைச் சுற்றியிருந்த இந்தத் தேவதைகள் பிளேக் கிருமிகளின் மறு பிறவிகள். புதுமைப்பித்தன்