பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 புதுமைப்பித்தன் ஆடியோடி அமர்ந்துபோன காலத்திலும் அவரை விட்டு தீங்கவில்லை, அவரது மனத்துக்குக் காயகல்பம் செய்து செய்து, தங்கள் காரியத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.

  • விளம்பரத்தைப் போட்டு விட்டால், எவனாவது. பணம்

நம்பித் தருவான்' என்று போதித்தார்கள். 'அதற்கென்ன, போட்டால் போகிறது' என்றார் புதுமைப்பித்தன். பர்வத குமாரி புரொடக்ஷன்ஸ்' விளம்பரம். சில பத்திரிகைகளில் விளம்பரப் படுத்தப்பட்டது, முதல் படம்: வசந்தவல்லி, கதை வசனம்: புதுமைப்பித்தன், பிரதம நடிகர்: நாகர்கோயில் மகாதேவன்-இவை போல்வன விளம்பர விஷயங்கள். விளம்பரம் போடுவதற்கு முன்னால் நடந்த ஒரு சம்ப வத்தை நினைத்தால், இன்றுகூடத் துக்கம் கலந்த சிரிப்பு வருகிறது. தீபாவளிச் சமயம் என ஞாபகம். புதுமைப் பித்தன் ஊருக்குச் செல்ல நினைத்தார். கையில் பணி மில்லை. அன்றிரவு அவர் கிளம்பியாக வேண்டும். அவரது பையில் அன்றிருந்த நிதியின் மொத்தத் தொகை ஒண்ணே காலணா. அந்தச் சமயத்தில் நாகர்கோயில் மகாதேவன் ஓ மற்றும் அவரது கணங்கள் யாவரும் புதுமைப்பித்தனது - வீட்டில் இருந்தனர். நானும் இருந்தேன். 'விளம்பரத்தில் நாகர்கோவில் மகாதேவனின் பெயரை வெளியிடுவதற்கு முன்னால் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டுச் செய் வதுதான் முறை' எனப் புதுமைப்பித்தன் சொன்னார். அட் வான்ஸாக எதைக் கொடுப்பது? பக்கத்திலிருந்த குட்டித் தேவதை ஒன்று ஒரு வெள்ளி ரூபாயை எடுத்து நீட்டியது.

  • பட, 'முதலாளி* யான புதுமைப்பித்தன் அந்த ரூபாயை

வாங்கி, நாகர்கோயில் மகாதேவனிடம் கொடுத்தார். மான சீகமான பரஸ்பர நம்பிக்கையோடு ஒப்பந்தம் நிறைவேறி யது. இதன் பிறகு புதுமைப்பித்தன் ஊர் செல்லும் விஷயம் யோசிக்கப்பட்டது. மாலை நாலு மணி சுமாருக்கு புதுமைப் பித்தனுக்கு நூறு ரூபாய் எங்கிருந்தோ 'கடனாக வரவழைக் கப்பட்டது. புதுமைப்பித்தன் ரயிலுக்குக் கிளம்பினார். ரூபாய் வந்து சேர்ந்த ஒரு மணி நேரத்துக்குள் கையில் மிஞ்சிய பணம் பத்து ரூபாய்கூட இல்லை. டாக்ஸி, ஊருக்கு வாங்கிச் செல்லும் பழ வர்க்கங்கள் முதலியவற்றுக்குப்