பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணிய பூமி 33 புதுமைப்பித்தன் புனாவில் இருந்தபோது தமது மனை விக்கும் நண்பர்கள் சிலருக்கும் எழுதிய கடிதங்களே அவரது நோயின் பயங்கரத்தை எடுத்துக் கூறும், புதுமைப்பித்தன் புனாவில் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டார் என்பதை முழுதும் அறிந்த நண்பர்கள் இல்லை; அந்தப் பரிதாபத் தைப் பார்க்கும், பார்த்துக் கண்ணீர் வடிக்கும் துர்ப்பாக் கிய நிலை அவரது நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ லபிக்கவில்லை. எனவே அவரது கடிதங்கள்தான் அவரது புனா வாசத்தின் நிலையைத் தெரிவிக்க வேண்டும், புதுமைப்பித்தன் புனா போய்ச் சேர்ந்த புதிதில் அவ ரது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், தமது கஷ்டங்களைத் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து எழுதிய கடிதங் களிலும் தெரிவித்தார். பின்வரும் பகுதிகள் அவர் தமது மனைவிக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றிலிருந்து எடுத் தவை. புதுமைப்பித்தனை. க்ஷயரோகம் பற்றிய கொடு மையை இவை கூறும். தேதி : 7-11-47 ...புனா நகரம்; இங்கு நான் படும் அவதி சொல்லி முடியாது. ஒரு நாள் இருந்த இடம் மறுநாள் இல்லை. மராட்டி பிராமணச் சாப்பாடு. அதைத் , தெய்வந்தான் மெச்ச வேண்டும். குளிக்கவோ, மற்ற காரியங்களுக்கோ வசதி கிடையாது. வந்து இரண்டு நாளாச்சு. கட்டிட வேலை நடக்கிறது. கக்கூஸ் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் ...போஷணைக்குக் குறைவில்லை என்றாலும் உடம்பில் வலு குறைகிறது: கை வீக்கம், வலி அப்படியேதானிருக்கிறது, குணம் இல்லை. என் தொல்லைகளை உனக்கு வருணித்துக் கொண்டிருப்பதால் யாதொரு பிரயோஜனமுமில்லை...” தேதி: 20-12-47

    • ... நான் என்னைப்பற்றி நினைப்பதைவிட மோசமாக

உன்னால் என்னைப்பற்றி நினைக்க முடியாது....உனது சமீ பத்திய கடிதம் வந்த பிறகு எழுதாமலிருந்ததற்குக் கார. ணம் உண்டு. நான் என்னைப் பார்த்துப் பயந்தேன். உன் னைப் பயப்பட வைக்க விரும்பவில்லை. ஆனால் என்ன