பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணிய பூமி 87 புதுமைப்பித்தன் எழுதிய மேற்கண்ட கடிதங்களி லிருந்து அவரது துயரம் நிறைந்த சுய 'சரித்திரத்தின் சோகக் குரலைத்தான் நாம் கேட்க முடிகிறது. நாளுக்கு நாள் நோயின் நிலைமை வெகுவாக முற்றி வந்தது. அதன் பின்னர்தான் புதுமைப்பித்தன் ஊருக்குத் திரும்பிவிட யோசித்தார். 1948-ம் வருஷ ஆரம்பத்தில் தலை. தூக்கிட்ட அவரது நோய் மூன்று மாத காலத்துக்குள்ளாக அவரை மிகவும் குலைத்து விட்டது. ஏப்ரல் மாதத்தில் நிலைமை படுமோசம். எனவே அவர் ஊருக்குப் புறப்பட்டார், 1348-ம் வருஷம் மே மாதம் 5-ந் தேதியன்று அவர் வந்து சேர்வதாக அனுப் பிய தந்தி அவரது மனைவியின் கையில் கிடைத்தது. புனா என்ற புண்ணிய பூமி - புதுமைப்பித்தனின் உயிரை முடிக்கும் பாவத்தையும் சுமந்து கொள்ளாது, அவரை அவரது அந்திம காலத்தில் திருவனந்தபுரத்துக்கு வழி அனுப்பி வைத்துவிட்டது.