பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் சுத்தன் தங்கியிருந்த வீட்டின் சூழ் நிலையில், அங்குள்ள வர்களின் முகங்களில், பேச்சு வார்த்தைகளில் சாவின் பயங்கரம் படர்ந்து பரவ ஆரம்பித்தது. புதுமைப்பித்தன் செத்துக்கொண்டிருந்தார்... உடம்பெல்லாம் வியர்வை பெருகிப் பெருகி ஓடுகிறது. கமலாம்பாள் துடைக்கிறாள். சுற்றியுள்ளவர்கள் வாய் போது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். புதுமைப் இத்தள் ஒருவரே அப்போது பேசினார்:

  • 'கமலா, கடைசியாக இந்த உலகத்துக்கு நான்

வீட்டுச் செல்வது ராஜ முக்திப் படமும், தினகரியும்தான். கவலைப்படாதே, உன்னை நல்ல நிலையில் வைக்க விரும்பி னேன். ஆசைப்பட்டேன். ஆனால் விதி என்னை இந்தக் கோலத்துக்குத்தான் கொண்டு வந்து விட்டது... 30-&- 48. அன்றிரவுக்குப் பின் உலகுக்கெல்லாம் விடிந்தது; ஆனால் புதுமைப்பித்தனுக்கு அன்றிரவு விடியவே இல்லை. புதுமைப்பித்தன் காலமானார்.... அவரது மனைவியும் உறவினரும் கண்ணீர் வடித்தார் கள்; கதறினார்கள்; புலம்பினார்கள்.... “ “வானத்து அமரன் வந்தான் காண்; வந்தது போல் போனான் காண்! என்று புலம்பவில்லை. ' 'எழுதி எழுதிக் கையும் விங் கிற்றே; உயிரும் கொடுத்தாயே! என்றுதான் கமலாம் பாள் புலம்பினாள்.... அந்தப் புலம்பலே வீடு நிறைந்து ஒலித்தது....