பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/14

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 எப்போதும் படிப்பதும், எழுதுவதும், நினைத்தால் ஊர் சுற்றுவதும், பலருக்கும் கடிதங்கள் எழுதவதுமாக அவர் நாட்களைக் கழித்தார்.

இப்படி வெட்டிப் பொழுதுபோக்கிக் கொண்டிருப்பது வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. நிலைமை முற்றி, சண்டை வளர்ந்து, அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் உண்டாயிற்று. உறவினர் வீடுகளை நாடிப்போக வேண்டிய தேவையும் ஏற்பட்டது. இவ்வாறு எத்தனை நாட்களை ஒட்ட முடியும் முடிவில், அவர் மனைவியை திருவனந்தபுரத்துக்கு அவளது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வேலை கிடைத்தவுடன் அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு புதுமைப்பித்தன் சென்னைக்குப் போனார்.

அவருடைய தந்தை சொக்கலிங்கம் பிள்ளையும் புத்தகங்கள் எழுதியவர்தான். ஆய்வுரீதியில் இந்திய-ஐரோப்பிய இனங்கள் (IndoEuropean Races) என்ற பெரிய புத்தகத்தை அவர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இருப்பினும், மகனின் எழுத்து முயற்சிகளையும் எழுத்து ஆர்வத்தையும் அவர் என்றுமே ஆதரித்ததில்லை. மகன் உத்தியோகம் பார்த்துச் சம்பாதிக்காமல், கதைகள் எழுதுகிறேன் என்று வீணாகப் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறானே என்ற கோபம் அவருக்கு. எனவே மகனின் சிரமங்களைக் கண்டு அவர் மனம் இரங்கவில்லை.

சென்னை மாநகரம், பலவிதமான தொழில் முயற்சிகளுக்கும் முக்கிய இடமாக விளங்குவதுபோலவே பத்திரிகை மற்றும் புத்தகப் பிரசுரத் தொழிலுக்கும் கேந்திர ஸ்தானமாக இருந்து வருகிறது. வெகுகாலமாகவே. அதனால், பத்திரிகைத் துறையிலும் எழுத்து உலகத்திலும் ஈடுபட்டு வளர்ந்து முன்னேறத் துடிக்கிற எழுத்தாளர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எங்கிருந்தபோதிலும், முடிவாக சென்னை போய் சேர வேண்டும் என்ற ஆசையை ஒரு லட்சிய தாகமாகவே கொண்டு விடுகிறார்கள், அன்றும் இன்றும். . எனவே, புதுமைப்பித்தனும் மிகுந்த துன்பங்களை அனுபவித்த போதிலும், சென்னை சேர்ந்து என்ன செய்வது என்ற குழப்பநிலை இருந்தபோதிலும், துணிந்து தலைநகருக்கு வந்து விட்டார்.

அது நாடுநெடுகிலும் ஒரு விழிப்பும் வேகமும் பரவியிருந்த காலம். மகாத்மா காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் பொதுஜன இயக்கமாகப் புத்துயிர்ப்பும் செயல் மலர்ச்சியும் பெற்றிருந்த காலம். காந்திஜீயின் லட்சியங்களையும், சுதந்திர உணர்வையும் மக்கள் மத்தியில் பரப்புவதற்காகப் பத்திரிகைகள் பணியாற்றிக் கொண்டிருந்தன. மக்களை எட்டும் வகையில் குறைந்த