பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/35

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

‘போ, வெளியே!’ என்றான் அம்பி.

‘என் தாய்’ என்றான் கிட்டு,

அப்போது ஜயா உள்ளே தைரியமாக நுழைந்தாள். ‘இந்த இடத்திலா சண்டை நீங்கள் ஆண்பிள்ளைகளா?’ என்றாள்.

ஒடிச் சென்று மீனாட்சியம்மாளை மடிமீது எடுத்துக்கிடத்திக் கொண்டு கதறினாள்.

கிட்டுவைக் கொடுத்த புனிதமான சரீரம் அல்லவா?

அம்பிக்கு என்ன? அவன் தைரியசாலி அறிவின் தராசு.

இவள் செய்கை இருவர் மனசிலும் ஒரு சாந்தியைக் கொடுத்தது.

அவள் பெண் உணர்ச்சிவசப்பட்டவள். மதம் அவளுக்குத் தெரியாது. அம்பிக்கு அவள் செய்கை அவன்முன் அவளைப் பெரிய புனிதவதியாக்கியது.

மெதுவாக சரீரத்தைக் கிடத்திவிட்டு, கிட்டுவின் பக்கத்தில் வந்து நின்று கொண்டு, ‘போய் வருகிறோம்’ என்றாள்.

‘நீ ஒரு ஹிந்துப் பெண்’ என்றான் அம்பி.

‘நான் கிட்டுவின் மனைவி’ என்றாள் ஐயா,

‘கிட்டு...’. என்று என்னவோ சொல்ல வாயெடுத்தான் அம்பி.

அதற்குள் இருவரும் சென்று விட்டார்கள்.

இப்படி முடித்துவிடுகிறார் கதையை. வாழ்க்கையின் விசித்திரங்களையும், மனிதரின் விந்தைப் போக்குகளையும், முரண்பாடுகளையும் கதைகளாகச் சித்திரிப்பதுதான் புதுமைப்பித்தனின் நோக்கமாக இருந்தது என்று சொல்லலாம்.

மதத்தின்,தெய்வத்தின், தத்துவங்களின் பெருமைகளைப் பேசிக் கொண்டே பொழுதுபோக்குகிற பெரிய மனிதர்களின் வேஷங்களையும் செயல்முரண்களையும் அவர் தனது கதைகளின் மூலம் எடுத்துக் காட்டத் தயங்கவில்லை. ‘கொடுக்காப்புளி மரம்’ ‘நியாயம்’, ‘வாழ்க்கை’ போன்றவை இந்த ரகமானவை.

கொடுக்காப்புளி மரம் நாயகர் ஜான் டென்வர் சுவாமிதாஸ் அய்யர் கர்த்தரின் திருப்பணியைத் தமது வாழ்க்கையின் ஜீவனாம்சமாகக் கொண்டவர். உலகத்தின் சம்பிரதாயப்படி பக்திமான். எத்தனையோ அஞ்ஞானிகளைக் குணப்படும்படியும், என்றும் அவியாத கந்தகக் குழியிலிருந்து தப்பவைத்தும், மோட்ச சாம்ராஜ்யத்திற்கு வழி