பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/40

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ராமசாமிப் பத்தர் வாழ்க்கை முழுவதும் இல்லாமையோடும் நோயாளி மனைவியோடும் உழன்று, மனைவிக்குத் தேவைப்படுகிற உதவிகளை எல்லாம் செய்து சிரமப்படும் செல்லம்மாள் கதையின் பிரமநாயகம் பிள்ளை போன்றோர் வாழ்க்கையின் உண்மைத் தன்மையைப் பிரதிபலிக்கும் உயிர்ச் சித்திரங்கள்.

‘செல்லம்மாள்’ புதுமைப்பித்தனின் சிறந்த கதைகளில் முக்கியமான ஒன்று. திறமையாக எழுதப்பட்டுள்ள. சோகரசம் தளும்பும், வாழ்க்கைச் சித்திரம் அது. மத்தியதர வர்க்கத்து உழைப்பாளி மனிதனின் ஆசைகளையும் கனவுகளையும் ஏக்கங்களையும் யதார்த்த வாழ்க்கை நிலைமைகளையும் உள்ளது உள்ளபடி கூறுகிறது அது

மத்தியதர வர்க்க மனிதர்களின் இயல்புகளையும், ஆசைகளையும், செயல்முறைகளையும், இயலாமையையும் வர்ணிக்கும் மற்றும் சில கதைகளை புதுமைப்பித்தன் உருவாக்கியிருக்கிறார். ‘மனித யந்திரம்’, ‘சுப்பையாப் பிள்ளையின் காதல்கள்’ ஆகியவை இவ்வகையில் சேரும். ‘நியாயம் தான்’ கதையில் விவரிக்கப்படுகிற வடலூர்ப்பிள்ளையும் மத்தியதர வர்க்க இயல்புகளைப் பிரதிபலிக்கிறவர்தான். ஆனால், அவர் துணிந்து, தந்திர யுக்திகளைக் கையாண்டு பணக்காரர் ஆகி விட்டார்.

‘மனித யந்திரம்’ மீனாட்சிசுந்தரம் பிள்ளை இந்த வர்க்கத்தின் சரியான பிரதிநிதியாகவே இருக்கிறார். நாற்பத்தைந்து ஆண்டுகள் ஒரே கடையில் வேலைக்கிருந்து, உப்புப் புளி வியாபாரம் செய்து, உள்ளுக்குள் பெரிதாக ஆசைக் கனவுகள் வளர்த்து வருகிறவர்தான்.

‘கால்மேல் கால்போட்டு ‘ஏ மீனாட்சி’ என்று தாம் அழைக்கப்படுவதுபோல் தம் இஷ்டப்படி ஆட ஒரு மீனாட்சியும், ஸ்டோர் கடையும் கைக்குள் வரவேண்டும். ஒருமுறை கொழும்புக்குப் போய் விட்டு, தங்க அரைஞாண், கடிகாரச் சங்கிலி, வாட்டசாட்டமான உடம்பு, கையில் நல்ல ரொக்கம், கொழும்புப் பிள்ளை என்ற பட்டம் முதலிய சகல வைபவங்களுடனும் திரும்பவேண்டும். தெருவில் எதிரே வருகிறவர் எல்லாரும் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, பல்லை இளித்தவண்ணம் மரியாதை செய்ய வேண்டும் என்றெல்லாம் மனக் கோட்டை கட்டிய மீனாட்சிசுந்தரம் பிள்ளை கடைசி நேரத்தில் செயல் துணிவு இல்லாதவர் ஆகிவிடுகிறார்.கடையிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, ரயில் நிலையம் போய், டிக்கட் எடுத்து, ரயிலிலும் ஏறி உட்கார்ந்துவிட்டார் அவர். அவ்வேளையில் அவருக்கு இயல்பான பய உணர்வு அவரை நடுங்க வைக்கிறது. கடைக்கே திரும்பி விடுகிறார். எடுத்த பணத்தை கல்லாப் பெட்டியில் வைத்துவிட்டு, டிக்கெட் வாங்கிய காசுக்காக ‘மீனாட்சி பற்று பதினொன்றே காலனா’