பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/47

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

‘எப்போதோ ஒரு நாள் நின்று கல்லான இதயம் சிலையுள் துடிக்கிறது. போன போன இடத்தில் நின்று இறுகிப்போன ரத்தம் ஓட ஆரம்பிக்கிறது. கல்லில் ஜீவ உஷ்ணம் பரவி உயிருள்ள தசைக் கோளமாகிறது. பிரக்ஞை வருகிறது. கண்களை மூடித்திறகிறாள் அகலிகை. பிரக்ஞை தெரிகிறது. சாப விமோசனம்! சாப விமோசனம்! சாப விமோசனத்துக்குப் பிறகு வாழ்வு பற்றிய மலைப்பு கெளதமனுக்கு ஏற்படுகிறது. அகலிகை மனமும் மிரளுகிறது. ஆனால் ராமன் மனநிலை?

‘ராமனுடைய கல்வி, தர்மங்கள் கொண்டு பார்த்தது, தெளிவின் ஒளிபூண்டது. ஆனால் அனுபவச் சாணையில் பட்டை பிடிக்காதது. வாழ்வின் சிக்கவின் ஒவ்வொரு நூலையும் பின்னலோடு பின்னல் ஒடியாமல் பார்த்த வசிஷ்டனுடைய போதனை. ஆனால் சிறுமையை அறியாதது. புது வழியில் துணிந்து போக அறிவுக்குத் தெம்பு கொடுப்பது.’

‘உலகத்தின் தன்மை என்ன, இப்படி விபரீதமாக முறுக்கேறி உறுத்துகிறது: மனசுக்கும் காரனை சக்தியின் நிதானத்துக்கும் கட்டுப் படாமல் திகழ்ந்த ஒரு காரியத்துக்கா பாத்திரன்மீது தண்டனை‘’ என்ற நினைக்கிறான் ரசமன்.

‘எவ்வளவு இலேசான, அன்புமயமான, துணிச்சலான உண்மை!’ என்று இரண்டு ரிஷிகளும் குதூகலிக்கிறார்கள். சாப விமோசனத்துக்குப் பின்னர், அகலிகை, கோதமன் இருவர் உள்ளத்திலும் அமைதி இல்லை; வாழ்க்கையில் ஆனந்தம் இல்லை.

‘அவள் மனசில் ஏறிய கல் அகலவில்லை. தன்னைப் பிறர் சந்தேகிக்காதபடி, விசேஷமாகக் கூர்ந்து பார்க்கக்கூட இடங்கொடாத படி நடக்க விரும்பினான். அதனால் அவள் நடையில் இயற்கையின் தன்மை மறந்து இயல்பு மாறியது. தன்னைச் சூழ நிற்பவர்கள் யாவருமே இந்திரர்களாகத் தென்பட்டார்கள். அகலிகைக்கு பயம் நெஞ்சிலே உறையேறிவிட்டது. அந்தக் காலத்திலிருந்த பேச்சும் விளையாட்டும் குடியோடிப் போயின. ஆயிரம் தடவை மனசுக்குள் திரும்பித்திரும்பிச் சொல்லிப் பாடம் பண்ணிக்கொண்டு, அந்த வார்த்தை சரிதானா என்பதை நாலு கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் எதையும் சொல்லுவாள். கோதமன் சாதாரணமாகச் சொல்லும் வார்தைகளுக்குக் கூட உள்ளர்த்தம் உண்டோ எனப் பதைப்பாள். வாழ்வே அவளுக்கு நரக வேதனையாயிற்று:’ அதில் மேலும் வேதனைக்ள் ஏற்படும்படி மற்றவர்கள் நடந்து கொண்டார்கள்.