பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/53

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 மயங்கி விழுகிறார். கோயிலில் பூஜை செய்யும் சாஸ்திரிகள் அவருடைய நிலையை அறிந்து வேதனைப்படுகிறார். காந்தி பக்தர் கூறிய கருத்துக்கள் சாஸ்திரிகளுக்குக் குழப்பம் உண்டாக்குகின்றன.

அவர் கோயிலில் விக்கிரத்தின் முன்னே நின்று தனது உள்ளத்தின் கவலைகளை எல்லாம் சொல்லி அழுதார். அவருடைய நம்பிக்கை உடைந்துபோயிற்று. எதை நம்புவது என்று சந்தேகம் வந்து விட்டது.

இதுவரை நடந்து வந்தது உண்மையா? அவர் சொல்லுவது உண்மையா? பேசாது இருக்கிறாயே, நீயும் உண்மைதானா? குரலில் என்ன பரிதாபம் என்ன சோகம் என்ன நம்பிக்கை ‘ஏ தெய்வமே, நீயும் உண்மைதானா?’ எனப்புலம்பினார் பக்தர் என்று புதுமைப் பித்தன் விவரிக்கிறார்.

தெய்வத்திடம் வெற்றிகரமாக வாதாடும் மனிதர்கள்-மனித நிலையையே உயர்வாக மதிக்கிற மனிதப் பிறவிகள்-தெய்வ சக்தியின் கையாலாகாத்தனத்தைச் சுட்டிக் காட்டுகிற சாதாரணர்கள் அவருடைய கதைகளில் எடுப்பாக விளங்குகிறார்கள்.

‘உமக்கு எல்லாவற்றையும் அழிக்க முடியும் உம்மை அழித்துக் கொள்ள முடியுமா? நீர் மட்டும் மிஞ்சுவதுதான் சூன்யம் என்று அர்த்தமா? உம்மையும் அழித்துக் கொள்ளும்படி நீர் தொழிலை நன்றாகக் கற்று வந்தபின், நெஞ்சைத் தட்டிப் பார்த்துக் கொள்ளும் என்று கைலயங்கிரி ஈசனைப் பார்த்துக் கேட்கிற குழந்தை அதே கிடக்கிறது. பார். நான் போட்டுவிட்டு வந்த உடல், அதில் போய் உட்கார்ந்துகொள். அப்புறம் உன் கிங்கரர்களை ஏவி அழைத்து வரும்படி செய். அப்போது தெரியும் உனக்கு பயம் என்ன என்பது’ என்று எமதர்மனைப் பார்த்து சொல்லிச் சிரிக்கிற மனித உயிர்-

வரம் கொடுக்க வந்த மகா விஷ்ணுவைப் பார்த்து நீர் செப்பிடு வித்தைக்காரனா, பகல் வேஷக்காரனா? என்று கேட்டு விட்டு தபஸ் பண்ண ஒடும் குழந்தை

என்னை சிருஷ்டிக்க நீர் உபயோகித்த புழுதியைவிட்டு நான் எப்படி விலகமுடியும்? நான் நிமிர்ந்து நேராக நிற்பதற்கே இந்தப் புழுதிதானே ஆதாரம் புழுதியைக் கண்டு அஞ்சும் உமக்கு, அதன்மீது நிற்கும் என்னை அறிந்துகொள்ளச் சக்தி உண்டா? நீர் அந்தச் சக்தி பெற்றுக் கீழே வரும்வரை, நான் இந்தப் புழுதியில் கண்டெடுத்த, அதில் என்னோடு பிறந்த இந்த இரும்புத் துண்டை வைத்து என்னைப்