பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/57

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கைலாசபுரம் ஆற்றங்கரை ஒரத்தில், உச்சிப்போதில், பனை மூட்டின் அடியில் குந்தி உட்கார்ந்திருந்த பரமசிவம் பிள்ளையின் நனவோட்டத்தை அற்புதமாக எடுத்துச் சொல்கிறது கதை. காலம், பிரபஞ்சம், சிருஷ்டி ரகசியம், பொதுவான வாழ்வு, தன்னுடைய வாழ்க்கை, கைலாசபுரம் சுற்றுப்புரம் முதலிய சகல விஷயங்கள் பற்றிய நினைப்புகளும் அவருள் வலிய சிந்தனைகளாக ஒடுகின்றன. புதுமைப் பித்தனின் நடைவேகத்துக்கு இது நல்ல உதாரணமாகவும் அமைகிறது. மேலும், தமிழ்ச் சிறுகதையில் ‘பரிசோதனை ரீதியான எழுத்து’ என்பதற்கும் இது நல்ல எடுத்துக்காட்டு.

‘கள்ளிப்பட்டியானால் என்ன? நாகரிக விலாசமிட்டுத் தொங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம் போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஒடிக் கொண்டு இருக்கிறது.ஒடிக்கொண்டேயிருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக் கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே? பிளவு-பின்னம் விழாமல் இழுக்கப்பட்டு வரும் ஒரே கம்பி இழையின் தன்மைதானே பெற்றிருக்கின்றது? இல்லை-இல்லை. சிலத்திப் பூச்சி தனது வயிற்றிலிருந்து விடும் இழை போல நீண்டுகொண்டே வருகிறது. இன்று நேற்று-நாளை என்பது எல்லாம் நம்மை ஒர் ஆதார எண்ணாக வைத்துக் கொண்டு கட்டி வைத்துப் பேசிக் கொள்ளும் சவுகரியக் கற்பனைதானே? நான் என்ற ஒரு கருத்து, அதனடியாகப் பிறந்த தானல்லாத பல என்ற பேத உணர்ச்சி, எனக்கு முன், எனக்குப் பின்என்று நாமாக வக்கணையிட்டுப் பேசிக்கொண்ட வரிகள். இவை எல்லாம் எத்தனை தூரம் நிலைத்து நிற்கும்.நான் என நினைத்த, நினைக்கும், நினைக்கப் போகும் பல தனித் துளிகளின் கோவை செய்த நினைப்புத்தானே இந்த நாகரிகம்.கூட்டு வாழ்வு என்ற வாசனையையொட்டி, மனசு இழைத்து இழைத்துக் காட்டும் மனச்சிற்றில் தானே இந்த நாகரிகம்..மகா காலம் என்ற சிலந்தியின் அடிவயிற்றிலிருந்து பிறக்கும் ஜீவத் துளியின் ஒரத்தில் கட்டி வைத்த மணற் சிற்றில்.என்ன அழகான கற்பனை என்று பரமசிவம் பிள்ளை நினைக்கலானார்?’ இப்படி அழுத்தமான சிந்தனையோடு மேலே மேலே வளர்கிறது கதை காலம், கடவுள், பிறப்பு, நான் பற்றி எல்லாம்நினைவை ஓட விட்டபடி இருந்த பரமசிவம் பிள்ளையை பாம்பு கடித்துவிட்டது. மரண நிலையில் கிடக்கும் அவரது நனவோட்டம் எழுத்தாக்கப் பட்டுள்ளது கதையில். முடிவுப் பகுதி சுழி என்ற தலைப்பில் ஆசிரியர் பேச்சாக அமைந்திருக்கிறது.