பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/67

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

‘வாழ்வு, வாழ்க்கை’ என இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ, தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது மனித சிந்தனையின் சார்ம்.

வாழ்வு என்பது தோற்றம். ஸ்திதி, மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத் தன்மை வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவ ராசியின் உயிர்ப்பாசத்தினால் நிகழும் அவஸ்தை இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது.

வாழ்வின் நியதி ஒன்று. சூத்திரம் ஒன்று என வற்புறுத்துவது ஆஸ்திகம். வாழ்வு நியதிக்குக் கட்டுப்படாதது; பிரபஞ்ச உற்பத்தியே அகஸ்மாத்தாக நிகழ்ந்த சம்பவம், இதில் நியதிக்கோ, ஒரு கட்டுக் கோப்புக்கே இடம் உண்டு என நினைப்பது வெறும் சொப்பனா அவஸ்தை என வற்புறுத்துவது நாஸ்திகம்.

இவ்விரண்டுவிதமான மனநிலைகளுக்கும் பிறப்பிடம் மனித சித்தம். இதைச் சித்திரமாகத் தீட்டுவது இலக்கியம். மனிதனுக்கும் புறவுலகுக்கும் உள்ள தொடர்பை அல்லது தொடர் பின்மையை மனிதக் கண்கொண்டு பார்ப்பது இலக்கியம்.

மனிதன் உணர்ச்சிக்கு உட்பட்டவன். உணர்ச்சி உண்மையறியும் சாதனமாகவும், அதை மறைக்கும் திரையாகவும் அமைந்துள்ளது. இலக்கியம், மன அவசத்தில் தோன்றி, புறவுலகின் அடிமுடியை நாட முயலும் ஒரு பிரபஞ்சம். இது தேசந்தோறும் பாஷைக்கும் பண்புக்கும் தக்கபடி பல்வேறு ரூபங்களில் அமைந்துள்ளது. இதன் பொது விதிகளை,தன்மைகளை ஆராயும் நோக்கத்துடன் கட்டுரைகள் எழுதியதாகப் புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருக்கிறார்.

அவருடைய சிந்தனை ஒட்டத்தின் தன்மையை இந்த முன்னுரை எடுத்துக்காட்டுகிறது. தனது கதைகளைப்பற்றியும், தன்னைப் பற்றியும் ‘என் கதைகளும் நானும்’ என்ற கட்டுரை எழுதியுள்ள புதுமைப்பித்தன், சிறுகதை பற்றி விரிவான கட்டுரை ஒன்றும் எழுதியிருக்கிறார். தமிழ்ச் சிறுகதைகள் குறித்தும், பொதுவாகச் சிறுகதையின் தன்மைகள் பற்றியும் அதில் அவர் சிந்தனைகள் வளர்த்திருக்கிறார்.

பிரபஞ்சம், மனிதனின் தோற்றமும் வளர்ச்சியும், வாழ்க்கை பற்றி எல்லாம் ஆழ்ந்து சிந்திக்கும் கட்டுரை உங்கள் கதை என்று எழுதப்