பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/68

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பட்டுள்ளது. அதன் முடிவுரையாக அவர் எழுதியிருப்பது ரசமான பகுதியாகும்-

‘மனிதன் ஒர் அபூர்வப் பிராணி காலநதியில் அவன் வாழ்வின் யாத்திரை வெகு அற்புதமானது. மனித வர்க்கம் இந்த நாகரிதத்தினால் நசித்துப்போகும் என்று எத்தனையோ அறிஞர்கள் வலியவந்து சாவுமணியடிக்கிறார்கள். பிரமைகளும் அசட்டுத் தனங்களும் இருக்கும் வரை அந்தக் கவலை உலகுக்கு ஏற்படவேண்டிய அவசியமே இல்லை’.

‘மகாவிஷ்ணு விஸ்வரூபம் எடுத்து, வானத்தைத் தொட்டது பழைய கதை. அதன் உண்மையைப்பற்றி இங்கு ஆராய்ச்சி இல்லை. இன்று மனிதன்தான் வானத்தைத் தன் லட்சியங்களால் அளக்கிறான். அவன் கால்கள் புழுதி படிந்திருந்தாலும் பூமியில் நன்றாக ஊன்றப் பட்டிருக்கின்றன. அவன் காலைத் தடுமாறாமல் நிலைபெற வைத்திருக்கிற வரையில் மனிதவர்க்கம் நசித்துப் போகாது. வானத்து லட்சியங்கள் மனித்னைப் பூமியில் தாங்கவில்லை. உயிர்வாழ்தல் என்ற பாதம்தான் அவனை நிறுத்தி வைத்திருக்கிறது. பிரமை என்ற புழுதி படிந்திருந்தால் என்ன? உண்மை மங்கினாலும் வாழ்க்கை நின்று விடாது’.

கலை, தத்துவம், கவிதை, இலக்கியம் சம்பந்தமான புதுமைப் பித்தனின் அபிப்பிராயங்கள் சிந்தனைப் பொறிகளாக அவருடைய கட்டுரைகளில் ஆங்காங்கே கலந்து காணப்படுகின்றன. அறிவின், அனுபவ ஞானத்தின், மின்வெட்டுகளான அவை அவருடைய ஆழ்ந்த சிந்தனைத் திறனுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாக ஒளிர்கின்றன.

‘இலக்கியம் வாழ்க்கையின் எதிரொலிகள்: சமூகத்தின் வளர்ச்சியைக்காட்டும் மைல்கள்; மனித இலட்சியத்தின் உயிர் நாடி’ (நமது கலைச் செல்வம்).

இலக்கியத்தைப்பற்றி விஸ்தரிக்கலாம், விவாதிக்க முடியாது. சூத்திரத்தால் விளக்க முடியாது. தர்க்கத்திற்கு அடங்கியதல்ல அது. சிருஷ்டி வகையே அப்படித்தான். தர்க்கத்தின் வழியாக இலக்கியத்தைப் பார்க்க முடியாது. இலக்கியம் சிருஷ்டியின் மேதையுடன் எதிரெதிரான விஷயங்களை உள்ளடக்கியிருக்கலாம். தர்க்கம் , ஒரு படிக்கட்டு வழியாக, ஒரு பரிசோதனைவழியாக, விஷயங்களை நோக்க முயலுகிறது. அதற்கு ஒன்று சரி என்று பட்டுவிட்டால் மற்றவை இருக்க நியாமில்லை. இருக்காது என்ற கொள்கை. ஆனால் இந்த வாழ்க்கை அவ்வளவு லேசான கட்டுக்கோப்பில் சிருஷ்டிக்கப் படவில்லை. தர்க்கத்தின் பிரியமான, அந்தரங்கமான கொள்கைகளைச் சிதறடிக்கும்படி வாழ்க்கை இருந்துவருகிறது. அதேமாதிரிதான்