பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தனின் செல்வாக்கு #3 எழுத்தாளர்களும் அவருடைய படைப்புகளினால் தாக்கம் பெற்று. புதுமைப்பித்தனை தங்கள் ஆதர்ச எழுத்தாளராகக் கொண்டுள்ளனர். புதுமைப்பித்தன் வாழ்ந்தது குறைந்த காலமேயாகும். 1906ல் பிறந்து 1948ல் மறைந்துவிட்ட அவர் எழுத்துத்துறையில் ஈடுபட்டி ருந்ததோ மிகவும் குறுகிய காலம்தான். 1933 முதல் அவர் கதைகள் எழுதலானார். 1948க்குப் பிறகு அவர் சிறுகதை எதுவும் எழுதவில்லை. அவருடைய கவனம், உழைப்பு, காலம் எல்லாம் சினிமாத் துறையிலேயே ஈடுபடுத்தப்பட்டிருந்தன. ஆகவே, இலக்கியப் படைப்புக்காக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது சுமார் பன்னிரெண்டு வருடங்கள்தான். இக்குறுகிய காலகட்டத்தில் அவர் புரிந்துள்ள சாதனைகள் அவருடைய மேதைமையை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. அவரது அபாரத் தன்னம்பிக்கையும், உணர்ச்சித் தீவிரமும், சமரிடுவதற்குத் தயங்காத போர்க் குணமும், புதுமைகள் செய்ய வேண்டும் என்ற வேகமும், தனது எழுத்தின்மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றுதலும் இச்சாதனைகளுக்கு அவருக்குத் துணைநின்றன என்று சொல்ல வேண்டும். - கால ஒட்டத்தில் புதுமைப்பித்தன் எழுத்துக்கள் கவனிப்பும் போற்றுதலும் பெற்று வந்துள்ளன. பல்கலைக் கழகங்களில் அவருடைய மேதைமையை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. அவரது அபாரத் தன்னம்பிக்கையும், உணர்ச்சித் தீவிரமும், சமரிடுதற்குத் தயங்காத போர்க் குணமும், புதுமைகள் செய்ய வேண்டும் என்ற வேகமும், தனது எழுத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றுதலும் இச்சாதனைகளுக்கு அவருக்குத் துணைநின்றன என்று சொல்ல வேண்டும். கால ஒட்டத்தில் புதுமைப்பித்தன் எழுத்துக்கள் கவனிப்பும் போற்றுதலும் பெற்று வந்துள்ளன. பல்கலைக் கழகங்களில் அவருடைய படைப்புக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர் கதைகள் பற்றிய ஆய்வு நூல்களும் விரிவான விமர்சனக் கட்டுரைகளும் வெளிவரலாயின. புதுமைப்பித்தன், கதைகள் இப் போதும் சிரத்தையோடு பல்வேறு பார்வைகளில் விமர்சிக்கப் படுகின்றன. - தற்காலத்தில், சமுதாய யதார்த்தங்களைக் கதைக்கு உரிய பொரு ளாகக் கொண்டு இலக்கியம் படைக்க விரும்புகிற எழுத்தாளர்களுக்குப் புதுமைப்பித்தன் சிறுகதைகள் முன் உதாரணங்களாக விளங்குகின்றன. இனி வருங்காலத்திலும் அநேக எழுத்தாளர்களுக்குப் புதுமைப்பித்தன் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குவார் என்று உறுதியாகக் கூறலாம்.