பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவங்கள் 97

பங்கள் அறிந்து தக்கவாறு வழி கடந்து சென்ருர். பனிப் பாறைகளுக்கும் நீரோட்டங்களுக்கும்

தப்பிச் சென்று கிலப் பகுதியின் கம்ே பயணம் நடுப் பாகத்தையும் அடைந்துவிட்ட

னர். இங்குற்ற கிலம் ஒடுவதாக இல்லை; கிலேயாகவே கின்றது. ஆனல் வழி கடப் பதுமட்டும் மிகுதியும் துன்பம் தருவதாக இருக்கது. மலைகளின் மேலும், கறடு முரடான கற்பாறை களின் மீதும் நடப்பதுபோன்ற துன்பத்தையளித் தது. மேடு பள்ளங்கள் மிகுதியும் கிறைந்திருந்தன; கூர்மையான பனிப் பாறைகளும் பரந்திருந்தன; பனிச் சேறு நெகிழ்ந்த பகுதிகளும் மிகுந்திருந்தன. மலைகளேக் கடப்பதுபோன்று வெகு உயரம் ஏறவும், பின் திடீரெனப் பள்ளங்களில் இறங்கவும் நேரிட்டது. செங்குத்தான பனிப் பாறைகளின் மீதும் கீழ் இறங்க வேண்டிய தாயிற்று. வழுக்குச் சோடுகளே இழைத்தும் வழி நடப்பது கடிதாயிற்று. உறுதியான பணித் தரையில் தம் கைவசம் கொண்டு சென்ற பெரிய கம்பங்களே ஊன்றி, அவற்றில் வலிய கயிறுகளைப் பிணேத்து, அவற்றைக் கீழ் நோக்கித் தொங்க விட்டு, அவற்றின் வழியே கீழே இறங்கினர். கயிறு மேற்புறம் உராய்ம் பொழுது அறுந்து விழுக் தாலும் விழுந்துவிடும். அவ்வாறு விழுந்துவிடின் கீழிருக்கும் வீரன் எங்குப் போய்ச் சேருவான் என்று கூறவும் வேண்டியதில்லை. இம் முறையில் அனைவரும் வெற்றி கொண்டனர். சிலர் பல தொந்திரவுக் காளாகினரேனும், எவரும் இதல்ை உயிரிழக்கவில்லே. கயிறு பிணேத்து இறங்க முடி யாத இடங்களில், வீரர்கள் தமது வீரத்தைய்ே கொம்பாக காட்டி, தமது ஊக்கத்தையே கயிருக அமைத்து, உயிரையே பணயமாகப் பிணேத்து, பனிப் பாறையில் மார்பையும் உடலையும் அடைக்