பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 புதுமை கண்ட பேரறிஞர்

தோற்றமளித்தது, அவ் வடத்தின் கீழும் மேலும் கட்டித் தொங்கவிட்ட பல கொடிகள் பறப்பது போன்ற தோற்றம் கண் கொள்ளாக் கவின் பெருங் காட்சியாக அமைந்திருந்தது. ஒரு சமயம் அது பொன் மயமாய் விளங்கும்; மறு நொடியில் அது பசு மஞ்சளாக மாறும் ; அதன்பின் இரண் டும் கலந்த வண்ண்த்தை வானிலே பரப்பும்; சிறிது சென்று பொன் தகட்டில் மரகதம் பதித்தாற் போல் இடையிடையே பசுமை கலந்து ஒளி வீசும்; உடனே அது மறைந்து வைரம், வைடூரியம், கேர்மேதகம் முதலிய பல வர்ணமுள்ள கற்களைப் போல் பிரகாசித்து வர்ணத்தை உதிர்க்கும். ஒரு நொடியில் வானவெளி ரோஜா கிறக்கை அன்ட் யும். உடனே அங்கு ரோஜாப் பங்கரில் முக்து மாரி பொழிவதுபோல் பல் வெண் புள்ளிகள் பாய்ந்துவத்து மறையும். இஃது, இயற்கை வானில் விளைவிக்கும் வாண விளையாட்டுபோலும்! இஃ தோர் இயற்கை அற்புதம் அன்று ஏதேனும் ஒரு சமயம் தோன்றும் விநோத நிகழ்ச்சியேயாகும். இதுவே வட் திசை விண்ணுெளி எனப்படுவது. இதனைப் பார்த்த கண்களும் பூத்துப்போக மெய்ம் மறந்து இப் பேரொளிக் காட்சியைக் கண்டு மகிழ்க் தனர் வீரர்கள். இக் காட்சி பல நாட்களுக்கும் இவர்கள் கண்களே விட்டகலவேயில்லே. காணுதற் கிரிய இக் காட்சியைக் கண்டபின் தாம் இதற்கு முன் அடைந்த இன்னலே மறந்தனர்; உடல் வருத் த்ம் விடுத்தனர்; உற்சாகம் கொண்டனர். இனி மேலும் இதைவிட அற்புதங்களைக் காணப் போகின்ருேம் என்னும் பேராசையும் கொண்ட னர் எனின் அவர்கள் கொண்ட ஆனந்தத்தை அளவிட முடியுமோ?

  • Northern Light