பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 புதுமை கண்ட பேரறிஞர்

தது. பல வரைகளைக் கொண்டு தொடராக அமைக் தது. ஆயிரத்து ஐந்நூறு மைல் நீளமும் இருநூறு மைல் அகலமும் உடையது. நாற்று அறுபதுக்கும் மேற்பட்ட ப்லபல சிகரங்களையுடையது. ம்ேல் வானம் இங்குத் தான் பொருத்தித் தாங்கப்பட்டு கிற்கின்றதிே என ஐயுறும் வகையில், வான் முகட்டை முட்டும் எவரஸ்ட் என்னும் கொடு முடியைத் கனதாகக் கொண்டது. இதனகத்தே யுள்ள சிறப்புக்களையும் அமைப்புக்களையும் கண் ணுற்றுத் தேவர்களும் விரும்பி இதனைத் தமது உறை விடமாகக் கொண்டுள்ளார் என்று சிறப் பித்துக் கூறும் சிறப்பு வாய்ந்தது.

இமயமலை பல சிகரங்களைக் கொண்டதான அலும் அவற்றுள் தவளகிரி, காஞ்சன சிருங்கம், எவரஸ்இ என்னும் கொடுமுடி ஆகிய மூன்றுமே - முக்கியமானவைகளாகும். இவைகள் சிகரங்கள் முறையே 26,826 அடி, 28,156 அடி, 29,002 அடி உயரமுள்ளவை யாகும். தவளகிரி என்னும் தொடருக்கு வெண்ணிறமலே: என்பது பொருள். எக்காலத்தும் வெண்பனிப் பட லம் ஆங்கு மூண்டு இருப்பதனுல் இப் பெயர் பெற் றது போலும், காஞ்சன சிருங்கம் என்பது பொற் சிகரம்' எனப்பொருள்படும். இச் சிகரம், காலைக் கதிரவன் கதிர்களோ, மாலைப் பரிதியின் பாக்த ஒளியோ பெறின் பொன்னிறமாக மிளிரும். இதனே அடையும் கருங்காகமும் பொன் கை மாறும் எனின், இதைவிட எவ்வாறு அதனைச் சிறப்பிக்க முடியும்? எவரஸ்ட் என்னும் கொடுமுடி, மாமலே ய்ர்சியின் மணிமுடி' எனப் புகழப்படுவது. இதனி லும் உயர்ந்த சிகரம் எங்குமே இல்லை. இமாலயம் என்னும் தொடர், 'பனி வீடு' எனப் பொருள்படும். இவ்வுயர்ந்த கொடுமுடி, கிறைந்த உறை பணியால் எப்பொழுதுமே மூடுண்டு இருக்கிறது.