பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿8 புதுமை கண்ட பேரறிஞர்

இமயக் கொடுமுடி கடல் மட்டத்திற்கு 29.002 அடி உயரத்தில் உள்ளது என்பதும், ஆங்குப் பணி கிறைந்திருக்கும் என்பதும் தவிர அங்குப் போய்ச் சேர ஏதேனும் வசதிகள் உள்ளனவா பாதை என்பது எவருக்கும் தெரியாது. பல பார்த்தல் இன்னல்களுக்கு உள்ளாக வேண்டும் என்று மட்டும் தெரியுமே ஒழிய, அவர் கள் இனி நேரிற் கண்டால்தான் தெரியவரும், ஆன தால் முதற்பயணம், முடியையே அடைவதற்காக அமையா விட்டாலும், சிறு பகுதியேனும் சென்று, பாதை முதலியவற்றின் விபரங்களேயும், எடுத்துச் செல்ல வேண்டிய சாதனங்களேயும் தக்கவாறு அறிந்து கொள்ள ஏதுவாக அமையட்டும் என்று தர்ன் முற்பட்டார்கள். குழுவினருள் * மீட், | லாங்ஸ்ட்ாவ் என்னும் இருவரும் சேர்க்து பயணம் செய்து 23,000 அடி உயரம் வரையில் சென்று, அதற்குமேல் அவ்வரையின்மேல் ஏற முடியாதவர் களாகித் திரும்பி வந்து சேர்ந்தனர். -

பாதை காணச் சென்றவர்கள் திரும்ப வந்து சேர்ந்ததும் தாம் சென்றுவந்த விபரங்களேயும் ஆங்காங்கு கிறைந்துள்ள இடையூறுகளையும் அறி வித்தனர். 28,000 அடிக்குமேல் போக

மறுமுயற்சி முடியவில்லையென்றும் சொன்னர்கள். மூச்சு மட்டும் சிறிதும் கட்டின்றி இருக் தால் இன்னும் சில தாம் போகலாம் என்றும் முடிவு கூறினர்கள். இதனைச் செவிமடுத்தபின் மேலும் உரம் வாய்ந்த ஹவர்ட்பரி என்பார் தலைமை தாங்கி, $ மலாரி என்னும் வீரருடன் புறப் பட்டுச் சென் ருர். மலாரி பலவாறு முயன்று:23,000 அடிகளையும் கடந்து சிறிது மேலே சென்ருரர்.

  • Meade f Longstaff f Howard Bury $ Mallory