பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகல் கழகமும் வாணிகழ்ச்சியும் 31

இப்பெரு முயற்சிக்குத் தலைமைதாங்கி நடத்து வதாக ஏற்றுக்கொண்ட காப்ட்ன் குக், கழகத்தின் சார்பில் அதற்குத் தேவையானவற்றை ஆயத்தம் செய்யத் தொடங்கினர். கப்பல் ஒன் 'பெரு முயற்சி றைத் தக்க வசதிகளுடன் புதுப்பித்த னர். அவர்கள் கொள்ளப்போகும் அரும் பெரும் முயற்சியின் பெயராலேயே அக் கலத்திற்குப் பெரு முயற்சி என்ற பெயரையே பொறித்தினர். ஓராண்டுக்கும் மேலேயே தேவைப் படும் உணவுப் பொருள்களும் சேகரிக்கப்பட்டன. உரம் மிக்க வீரர் பலர் நியமிக்கப்பட்டனர். அறிஞர் பலர் இப் புதுமைகாண ஆவலூன்றி இக்குழுவில் கலந்தனர். விஞ்ஞானத் துறையில் சிறந்து விளங் கிய பாங்க்ஸ் என்னும் பெருமகனுர் குழுவினருள் ஒருவராவர். விஞ்ஞானத் துறையில் பேரறிவாள ராகவும், அத் துறையில் புதுமை காணுவோர்க்குத் தக்க கொடையாளராகவும் இலங்கியவர் இவர். இயற்கை எழிலின் நுட்பமறிந்து தாவர நாற்கல்ே யில் சிறந்து விளங்கிய :பாக்டர் ளோலாண்ட்ச் என்பார் பெறற்கரிய இப்பெரு முயற்சியில் பங் கெடுத்துக் கொண்டார். இத்துணிேச் சிறப்புக்கள் வாய்ந்த பேரறிஞர்கள் குழுவில் கலந்திருக்தும், அதற்குக் கலைமை வகிக்கும் பெரும் பொறுப்பு காப்டன் குக்கைச் சார்ந்திருந்ததெனில் அவரது அருமை ப்ெருமைகளைச் சொல்லவும் வேண்டுமோ?

கரைதனில் பலர் கின்று களிகூர்ந்து வெற்றி முழக்கம் செய்து விடையனுப்ப, 1768-ம் ஆண்டு பெரு முழற்சி'க் கலம், கான் கொண்டுள்ள பெரு முயற்சியில் வெற்றித் திருவைக் கொணர அலை கடலில் ஆடியோடத் தலைப்பட்டது. வழியே பல துறைகளில் தங்கிகின்று தென் அமெரிக்காவை

  1. Endeavour *Banks f Dr. Solander