பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 புதுமைக் கண்ட பேரறிஞர்

தையும், முகப் பொலிவையும், அவர்கள் செலுத்தி வந்த் கலத்தையும், அதில் கிறைந்திருந்த பல விநோதப் பொருள்களையும் கண்டு திடுக்கிட்டு அதிசயமுற்றனர். தமது குல விளக்காகிய தெய்வமே மாற்றுருவில் வந்து காட்சியளிப்பதாக கினைத்தனர். கமாண்டர் குக்கை, கடவுளென்றும் அவரது குழுக்களைச் சுற்றுத் தேவன்தகளென் ஆறும் கொண்டனர். அவர்கள் முன்னிலையில் தெய்வ பக்தியோடு கை கட்டி, வாய் புதைந்து வந்தனை வழி பாடுகள் செலுத்தினர். ஊனளித்து உண்ண் வேண்டினர் ; உணவு பல படைத்து ஒதுங்கி கின்ற னர். இம் மூடச் செயல்களைப் பார்த்துக் குழுவினர் இவர்களது மடமையையும் ஆழ்ந்த கம்பிக்கையை யும் கண்டு வியந்து கின்றனர்.

தெய்வமெனப் போற்றப்பட்ட கமாண்டர் குக், தமது தீர்மானக் கப்பலில் திரும்பவும் பிர யாணம் புறப்பட்டார். சில காட் பயணம் சென்ற பின்னர் இவர்கள் ஒரு பெரும் பேரறிஞரும் புயலுடன் போராட வேண்டிய பெரும் புயலும் தாயிற்று. பாய் மரத்துாண் முறி வுற்றது. தீர்மானக் கலம் கொந்த வளிக்கும் கடலில் தத்தளிக்கத் தொடங்கியது. திறமைபெற்ற மீகாமர்களும், ஒப்பற்ற தலைவரு மாகிய கமாண்டர் குக்கும் செய்வதறியாது பலவாறு முயன்று, முயற்சி குன் ருது, உயிரைப் பணயமாக வைத்துக் கலத்தை வக்க வழியே திருப்பிச் செலுத்தி, முன் தங்கிய மணற் தீவிற்கே வந்து சேர்ந்தனர்.

தெய்வமும் தேவதைகளும் கடும் புயலுக்கு ஆற்ருது திரும்பி வந்து கொண்டிருப்பதை அத் தீவு மக்கள் கண்டனர். தெய்வம் புயலுக்கும், மழைக்கும், இடி மின்னலுக்கும் பயங்கொளியுமா?