பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 புதுமை கண்ட பேரறிஞர்

கொள்ளச் சுட்டுத்தள்ள வேண்டியதாயிற்று. ஆலுைம் அம் மக்கள் அணிந்திருந்த உறுதியான கவசம், துப்பாக்கிக் குண்டையும் ஏற்பதிர்யில்லே. தம்மை நோக்கிச் சுடுவதைக் கண்டதும் அவர்கள் முன்னிலும் வெகுண்டார்கள்.

முரடர்களின் சினத் தீ மூண்டெறிவதைக் கண் ணுற்ற குக், சுடுவதை நிறுத்திச் சமாதான முறை யைக் க்ைகொள்ள எத்தனித்தார். ஆனால் அவ் வேண்டுகோள் எவ்விதப் பயனையும் அளிக்க்வில்லை. ஈட்டிகளும், வேல்களும் பாய்ந்து பலர் உயிரிழக் தனர். சிறந்த போர்த்தலைவரும், எதற்கும் அஞ்சா நெஞ்சு படைத்தவருமான கமாண்டர் குக் பெரு மகனுர் இவர்கள் எதிர்ப்புக்குத் தாங்காது சரண் புகுவார் போன்று கை தாக்கி சின்ருர் கூற்றுவன் வ்ேலுருக் கொண்டனன் போலும். அக் கூரிய வேல் ஒரு முரடனின் கையினின்றும் வெளிப்பட் டது. அது அம் மாபெரும் வீரர், ஒப்பற்ற தலைவர், ஆராய்ச்சியாளர், கமாண்டர் குக் உடைய ஆவி யைக் கவர்ந்து சென்றது. பலராலும் போற்றப் பட்டுச் சிறந்து விளங்கிய கமாண்டரின், உயிரிழக்த உடலம், வேரற்ற மரமெனக் கீழே சாய்ந்தது.

குழுவினரின் தலைவராய கமாண்டர் குக் இறந்து ஒழிக் கதைக் கண்ணுற்ற முரட்டு மக்கள் ஆனந்தக்க்டத்தாடினர்கள். அளவிடற்கரிய ஆற் றில் வாய்ந்ததோர் ஆராய்ச்சியாளருக்கு இழைத்த தீங்கை அவர்கள் உணரவில்லை. அவர்கள் இழைத்த தீங்கினுல் அவர்கள் அடைந்த பெருமை ஏதும் உளதோ? அவரை வென்று விட்டோம் எனக் களி கூர்ந்து அம் மக்கள் தமது உறைவிடம் சென்றனர்.