பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இருள் கவிந்த கண்டம்

பதினெட்டாம் நூற்ருண்டில் ஆப்பிரிக்கா வைப் பற்றியும், அதன் உள் காட்டைப்பற்றியும் எவரும் எதுவும், அறிக்கிலர். ஆதலின் அதனே இருட்டுக் கண்டம் என்றும் இருண்ட் ஆப்பிரிக்கா என்றும் குறித்தனர். அந்தக் கண்டம் இருண்ட தன்று. அதனைப்பற்றிய விவரங்கள் ஏதும் வெளிப் படாததால் அதை இருள் சூழ்ந்திருந்தது எனக் குறிப்பிட்டனர்.

புது நாடு காணவேண்டுமென்ற ஆவலும், பல நாட்ட்வருடனும் வாணிபத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அவாவும் ஐரோப்பிய நாடுகள் எங்கனுமே பாவி யிருந்தன. இதற்கென ஒரு கழகமே கிறுவப்பெற்றிருந்தது. அயல் நாடுக்ளி லும், புது நாடுகளிலும், எவருமே போயறியாக வள மிக்க இடங்களிலும், கிலவியுள்ள விவரங்களே அறி வுறுத்துவதே அதன் முக்கியப் பணியாகும். மேலும் அவ்விடங்களுக்குத் தக்க அறிஞர்க்ளே அனுப்புவித்துத் தாம் கொண்டுள்ள பணிக்கான அபிவிருத்திகளே அச் சங்கம் செய்துகொண்டு வந்தது. இருண்ட ஆப்பிரிக்காவைப் பற்றிய விவரங் காணவும் இச் சங்கம் முயற்சித்தது ; ஆயினும் அதில் வெற்றி பெறவில்லை. அக் கழகத் திற்கு வெற்றித் திருவை அளித்து இருளிற் கிடந்த விவர்ங்களை ஒளியிற் கொணர்ந்த பெருமை!ழங்கோ பார்க் என்பவரையே சாரும்.

மங்கோ பார்க், ஸ்காத்லாந்தைச் சேர்ந்த பெரியார். செல்கர்க் என்னும் சகரருகேயுள்ள ஒரு

  1. Mungo Park "Scotland f Selkirk