பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 புதுமை கண்ட பேரறிஞர்

மங்கோ பார்க் ஆங்கு பைசானியாவில் 1 .டாக்டர் லெய்ட்லி என்னும் பெருந்த கையாளரை யடைந்து அவரது விருந்தினராகத் தங்கியிருந்தார். இவரது உடல் கிலேயும் கேடுற்றிருந்தது. நோய் குணமடைந்த பின், த்ாம் மேற்கொண்ட பணியில் ஈடுபட்டு முன்னேறுவதற்கான முயற்சிகளைச் செய் யலாயினர். உள்நாட்டில் வழங்கும் மக்களின் மொழியையும், பற்பல இடங்களுக்கும் செல்லும் மார்க்கங்களையும் லெய்ட்லி வாயிலாகவும், மற்றும் பல வணிகர் வாயிலாகவும் பிழையற உணர்ந்து கொண்டார். மென்டிங்கோ மக்கள் பேசும் பாஷையில் தேர்ச்சி கொண்டார்.

மாரிக்காலமும் ஓய்ந்தது. பார்க், உள்நாடு செல்ல ஆயத்தமானர். லெய்ட்லியின் உதவியால் இவரை இரு நீக்ரோக்கள் துணை கொள்வா ாாயினர். ஜான்ஸன், ட்ெம்பா என்பன பார்க்கின் இவர்கட்குப் பெயர். முன்னவன் சில குழுவினர் காலம் இங்கிலாந்தில் வசித்திருந்தமை யால் அவ்வுள் நாட்டுப் பாஷை தவிர ஆங்கிலமும் நன்கு அறிந்தவன். பின்னவன் ஆங்கு வழங்கும் மொழிக்ள் யாவற்றிலும் தேர்ச்சி பெற்ற வன். இவ்விருவரும் சிறந்த உண்மையான ஊழி யர்க்குரிய இலக்கணம் பொருந்தியவர்கள். உள் காட்டுப் பயணத்திற்கு இவர்களது துணே பேருதவி யாயிற்று. அடிமை வாணிபத்தில் ஈடுபட்ட ஒரு வணிகரும், உள்நாடு செல்லும் ஒரு க்ேரோவும், மற்றும் சிலரும் இவர்களுடன் கூட்வே பிரயாண்ம் செய்ய முற்பட்டனர். எழுவர் கொண்டதே இவரது குழு ஆயிற்று. பார்க் ஒரு குதிரையிலும், ஊழியத் துணேவர்கள் இரு மட்டக் குதிரைகளிலும் பயணம்

  1. Dr. Laidley * Mandingo