பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நீர்வீழ்ச்சி கண்ட நல்லறிஞர்

பதினெட்டாம் நூற்றுண்டில் புதுமை காணச் செல்ல விரும்பியவர்களும், முயற்சித்தவர்களும், தாம் செவியுறும் செல்வவளம் பற்றியே அவற்றைக் காண முற்பட்டனர். பத்தொன்பதாம்

மத நூற்ருண்டில் இங்கிலாந்து, மற்றும் பல போதனை ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலிருந்து கிறிஸ்தவ மதத்தை உலகத்தின் பல பாகங்களிலும் பரப்ப வேண்டியும், கிறிஸ்து பெரு மான் கல்லுறைகளை அறிவுறுத்தவும், பல மத் போதனைச் சங்கங்களைச் சேர்ந்த பாதிரிகளும், அறிஞர்களும், பெரியோர்களும், போதகர்களும் பல இடங்களுக்கும் பரந்து சென்றனர், செல்வம் பெறும் நோக்கமோ, குடியேறும் நோக்கமோ, வெற்றி கொண்டு தமதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமோ ஆகிய இவற்றில் ஒன்றையும் எண்ணுது, தமது மதத்தைப் பரவச் செய்ய வேண் டும் என்ற ஒரே நோக்கத்தோடு இப் பெரியார்கள் பிரயாணம் செய்தனர். மத போதனையை முன் னிட்டு வெளிகாடு சென்று புதுமை கண்டு உலகுக்கு அறிவித்த அறிஞர்களுள் * ட்ரக்ட்ர் லிவிங்ஸ்டன்

என்பாரும் ஒருவராவர்.

டாக்ட்ர் லிவிங்ஸ்டன் இங்கிலாங்தைச் சேர்ந்த ஒரு மத போதகர். நாகரிக மின்றியும், அஞ்ஞான் இருளில் ஆழ்ந்தும், வெளிநாட்டுத் தொடிர்பு அம் அறும் இருந்த் இருண்ட கண்டமாகிய ஆப்பிரிக்கா வில் கிறிஸ்து பெருமான் மணி மொழிகளே அறி

  • Dr. Livingstone