பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 புதுமை கண்ட பேரறிஞர்

குன்றுகள் கருங்குன்றுகளானலும், தளிர் விட்டுத் தழைத் தோங்கிக் கவிழ்ந்திருந்த பசு மரங்களின் தேர்ற்றத்தால் பசுமலைகளாகத் திகழ்ந்தன. இவ் வரைகளி னின்றும் ர்ேக்கோடுகள் வரைந்தாற் போன்ற பூம்புனலருவிகள் பளிங்கன்ன ருேடன் விரைந்து வந்தன். மலைவளம் மல்கிய இப் பிரதேசத்தில் மந்த மாருதம் மெல்லென வீசியது. உடல் கலம் குன்றி யிருந்த பேரறிஞருக்கு இவ் அருங் காட்சிகளும், தென்றற் காற்றும் தெம்பு ஊட்டின.

இந்தச் செழுமையான பிரதேசத்தின் வழியே வழி நடந்து வர்ம்பளி நதியின் கரையோரம்ாகச் சென்றனர். ஆங்கோரிடத்தில் நீல வானில் வெண் புகைப் படலம் போன்றும், பனிநீர்ப் அற்புதக் படலம் பறப்பது போன்றும் அரிய தொரு காட்சி காட்சி புலனுயிற்று. ஆதவனின் பொற் கதிர்கள் அவற்றை, ஊடுருவிச் செல்லும் போது இயற்கையாகவும் செயற்கையாகவும் உள்ள பல வர்ணங்கள் தோன்றித் தோன்றி முறைந்தன. ஒரு சமயம் பளிச் சென்று செங்கிறம் தோன்றும் ; உடனே அது மாறுபட்டுப் பொன் னிறமாகும்; அது கண்டு மகிழ்ச்சியில் திளைக்த்ால் அதற்குள் அதுமாறித் தரையில் கிலவும் பசுமையை வானில் அமைக்கும். இதுவரை வறண்ட பாலே யையும், இருண்ட் அட்விகளையுமே கண்டுவக்க லிவிங்ஸ்டனுக்கு இத்தோற்றம் பெரும் வியப்பை யும் கனி மன மகிழ்ச்சியையும் அளித்தது.

இப்பெரு மகிழ்வால், தம்மையும் மறந்து கின் ருர் லிவிங்ஸ்டன். க்ம் கண்களையே அவரால் கம்ப முடியவில்லே. இத்தோற்றம் எங்கிருந்து உண்டா கிறது என்று அறிய விரும்பினர். சற்று இன்னும்