பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147|முருகுசுத்தரம் அந்த அச்சகத்தில் யான் ஐந்தாறு ஆண்டுகள் அச்சுக் கோப்பவராகப் பணி புரிந்து வந்தேன். கவிஞர் அப் போது ‘குயில்’ என்னும் பாட்டிதழ் ஒன்றைப் புதுவை யிலிருந்து வெளியிட்டுவந்தார். அவ்விதழில் உள்ளூர் வெளியூர்க் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறப்பிடம் தந்து கவிதைகள் வெளியிட்டார். அச்சுக் கோப்பவராக இருந்த எனக்கும், நாள்தோறும் கவிதை களை அச்சுக் கோத்த காரணத்தால், கவிதையுணர்வு பற்றிக் கொண்டது. கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல் என்னை நாள் தோறும் உந்தித் தள்ளிக் கொண்டி ருந்தது. ஒருநாள் கூடினர் பிரிவரோ இனி என்று தொடங் கும் காதற்கவிதை ஒன்றை எழுதிப் பாவேந்தர் பார் வைக்குப் பணிவுடன் வைத்தேன். நன்ருக இருக் கிறதே! மேலும் மேலும் தொடர்ந்து எழுது விட்டு விடாதே" என்று ஊக்கம் கொடுத்துப் பாராட்டினுர். குயில் ஏட்டில் வெளியிடுவதற்கு அப்பாடல் தகுதி யானது என்பதைக் குறிக்கப்பா என்று எழுதி ஒப்புதல் அளித்து, மாப்பிள்ள்ை தண்டபாணியிட்ம் க்ொடுத்தார். என் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது. யானும் ஒரு கவிஞன்!" என்ற உணர்வு பெற்றேன். அவர் ஊட்டிய இலக்கியப் பற்றும். கவிதை ஆர்வமும் இன்றும் என் உள்ளத்தில் பசுமையாக உள்ளன. 仓 பாவேந்தர் நாள்தோறும் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் உடையவர். அதிகாலை வேளையில் மிகுந்த சுறு சுறுப்போடும் தூய்மையோடும் காட்சியளிப்பார். காலையில் எழுந்ததும் வீட்டின் முன்பக்கம் உள்ள பலகை யில் வந்து அமர்ந்திருப்பார். ஒருநாள் காலைச் சிற்றுண்டியைமுடித்துக் கொண்டு ப்லகையில் அமர்ந் திருந்த போது, அவ்வழியாகப் போய்க் கொண்டிருந்த ஒருவரை நோக்கி, ஏம்பா மார்க்கெட்டுக்கா போற?’ என்று கேட்டார். அவரும் "ஆமாங்க ஐயா" என்று பதிலிறுத்தார். 'மீன் கடையிலே இந்த சுதும்பு மீன் விக்குதான்னு