பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43|முருகுசுந்தரம் தமிழச்சியின் கத்தி என்ற காப்பியத்தைப் படித்தேன். அழகிய தனித்தமிழ்க் காப்பியம்’ என்று பாராட்டினர். பாரதிதாசனின் பிற்காலப் படைப்புகள் யாவும் தனித்' தமிழில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளே பாரதிதாசனின் தனித் தமிழ் மலர்ச்சிக்குத் திருப்பு முனைகளாக அமைந்தவை. குயிலும் திருக்குறள் புத்துரையும். 1947-ஆம் ஆண்டில் பாரதிதாசனச் சென்னையில் ஒருமுறை சந்தித்தபோது 'குயில்’ என்ற பெயரில் 'பாட்டிதழ் ஒன்று தொடங்க இருப்பதாகவும், அதில் செய்திகளும், விளம்பரங்களும் கூடப்பாட்டிலேயே வெளியாகும் என்றும் என்னிடம் குறிப்பிட்டார். முதல் இதழும் அனுப்பி வைத்தார். அவ்வேட்டில் திருக்குற ஆளுக்குப் புத்துரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிகுந் தார். அம்முயற்சியில் தமக்குத் துணை புரிய வேண்டும் என்று சொல்லி ஒரு நண்பரை என்னிடம் தூதாக அனுப்பி வைத்தார். நானும் இசைந்தேன். மீண்டும் ஒருமுறை புலவர் குழுவில் நானும் அவரும் சந்தித்த போது திருக்குறளுக்குப் புத்துரை எழுதுவது பற்றி நீண்டநேரம் உரையாடிளுேம். பெரியார் ஒரு முறை என்னிடம் திருக்குறளுக்குப் புத்துரை எழுதும்படி துண்டினர், அப்போது "கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக் கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும்’ என் றும் கூறினர். 'நான் திருவள்ளுவரையும் உயர்வாகமதிக்கிறேன்; உங்களையும் உயர்வாக மதிக்கிறேன். உங்களுக்காகத் திருவள்ளுவருடைய கொள்கையைப் பொய்ப்பிக்க நான் விரும்பவில்லை. அதேபோல் திருவள்ளுவருக்காக உங்களுடைய கொள்கையைப் பொய்ப்பிக்கவும் நான் விரும்பவில்லை. உங்கள் இருவருடைய கொள்கையும் ஒன்று என்று நான் எப்போது நினைக்கிறேனே அப் பாது எழுதுகிறேன்' என்று பெரியாசிடம் சொன் னேன். இதை நான் பாரதிதாசனிடம் கூறியபோது "பெரியார் சொன்னது கிட்டத்தட்ட சரிதான்; ஆளுல் முழுக்கவும்