பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65|முருகுசுந்தரம் 1937 ஆம் ஆண்டு புதுச்சேரி தொழிலாளர் இயக்கத்தின் வேகமான நாட்கள், அப்போது என் பேச்சில் சூடு அதி கம் என்பார்கள். தூவ்போ வீதியும் மகாத்மா காந்தி வீதியும் சந்திக்கும் முனையில் அந்த நாளில் ஒரு வெற் றிலைபாக்குக்கடை இருந்தது. அதன் சொந்தக்காரர் சந்திரன் என்பவர். அந்தப் பெட்டிக்கடைதான் பா வேந்தரும் அவர் நண்பர்களும் சந்திக்கும் அரசியல் தலைமையகம். வாத்தியார் வந்துவிட்டால் எத்தனை மணி நேரமான லும் சந்திரன் இருக்கையில் அமரமாட்டார்.பாவேந்தர் மேல் அவருக்கு அப்படி ஒரு பக்தி. பாவேந்தர் பள்ளிப் பணியை முடித்துக்கொண்டு நேரே வீட்டுக்குப் போக மாட்டார். அந்த வெற்றிலைபாக்குக் கடையில் வத்து உட்கார்ந்து, நடப்பு அரசியலைப்பற்றிய விவகாரங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருப்பார். அவருடைய அர சியல் நண்பர்கள் செய்திகளைத் தாங்கிவரும் புருக்களைப் போல் தொப்புத் தொப்பென்று அவ்விடத்தில் தோன்று வார்கள். அவர்கள் கொண்டு வந்திருக்கும் செய்திக் குத் தக்கவாறு சிலிர்த்துக் கொள்வார்கள். பாவேந்தர் அத்தகையவர்களைப் பார்த்து என்ன ஆசாரி சிலுத்துக்குது! என்ன விஷயம்?’ என்பார், 'அவன் என்னு நினைச்சுக்கினு இருக்கான் தெரியிலெ’ என்பார் ஆசாரி. 'அவன்! இன்றைய யார் அவன்? என்று தமக்கே உரிய பாணியில் கேட்பார் பாவேந்தர். 'நல்ல காலம். கையிலே அப்போ பரங்கு, இல்ல. இருந்தா தம்பி இந்நேரம் iபெள்ளவாரிக்கு போயிருப் பார்-இது ஆசாரியின் பதில். பாவேந்தர் அட!என்னுப்பாஇவன் யாருன்னு சொல்ல மாட்டேன்கிருன்!’ என்று மடக்கி எதிரி முகாமின் உள் நடப்புச் செய்திகள் பலவற்றை அவர்கள் வாயிலாகத் தெரிந்து கொள்வார்.

  • பரங்கு-குத்துவாள் !. புதுச்சேரி சுடுகாடு.