பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97lமுருகுசுந்தரம் விட்டார். பாவேந்தர் இதைப் பொருட்படுத்தி யதாகவே தெரியவில்லை. 'கவி அரச அரிமா' (கவிராஜ சிங்கம்) என்னும் தமிழ்த்தொடரின் பொருளை அன்று உணர்ந்தேன், முரசுக் கட்டிலில் ஏறி உறங்கிய சங்கத் தமிழ்ப் புலவர் மோசிகீரனுர் என் நினைவில் நிழ லாடினர். முதல்வரின் அறையில், முதல்வர் அமரும் இருக்கையில் பாவேந்தர் அமர்ந்திருப்பதைக் கண்ட ஆசிரியர்கள் மூக்கின் மேல் விரலே வைத்து வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது பாவேந்தர் ஒரு சிறிய "ஸ்டுலை இழுத்து முன்னுல் போட்டு, அதன் மீது கால் களைத் தூக்கி வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினர். பாவேந்தர் செயலை இன்றும் ஆராய்ந்து பார்க் கின்றேன். அந்தப் புரட்சிக் கவிஞரின் உள்ளத்தைப் புரிந்து கொள்ள என்னல் இயலவில்லை! ஆகவே வாழ்த்தி வணங்குகிறேன். வீறுபெற்றுச் சிறக்கும் வல்லமை பெறுகின்றேன். வாழ்க பாவேந்தர் புகழ்! வளர்க அவர் புரட்சியுள்ளம்