பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 9星 7. புதுக் கவிதை நாயகர்: சென்ற நூ ற் றாண்டு வரையில் தமிழ் இலக்கியம் செய்யுள் வடிவத்தில் தான் இருந்தது. வானியல், மருத்துவம், தத்துவம், தருக்கம் போன்ற எந்த நூலாக இருந்தாலும் அவை யனைத்தும் செய்யுள் நடையில்தான் அமைந்தன. அச்சுப் பொறி அறியப் பெறாத காலத்தில் ஏடும் எழுத்தாணியும் கொண்டு விரைவில் எழுதி முடிக்கவும், எழுதியவற்றை எளிதில் நினைவில் நிறுத்தவும், அடுத்த தலைமுறை யினருக்கு அவற்றைச் செவிவழியாகக் கடத்துவதற்கும் செய்யுளின் ஒசையும் யாப்பு முறையும் உறுதுணை புரிந்தன. இலக்கியமும் செவிதுகள் கனி'யாகத் திகழ்ந்த தற்கு இதுவே காரணமாகும். இதனால், தான் உரையாசிரியர்களும் திட்பமும் நுட்பமும் கொண்ட உரைகளைச் சுருக்கமாகவே எழுத நேர்ந்தது. இக் காலத்தில் இவ்வுரையைப் புரிந்து கொள்வதற்குச் சர்பத் கலக்குவதுபோல்', மேலும் சொற்களைப் பெய்து நீராள மாகச் செய்து விளக்க வேண்டிய இன்றியமையாமையும் ஏற்பட்டது; ஏற்பட்டும் வருகின்றது. இன்றைய நிலை வேறு. நாம் வாழ்வது அறிவியல் தொழில் நுட்பக் காலம். தட்டச்சுப்பொறி, அச்சுப் பொறி, அச்சுப்பொறிகளிலும் பல்வேறு துட்ப வகைகள். இவை எழுதுவதற்குத் துணையாக அமைந்து விட்டன. நாடாப் பதிவும் பிலிம் படங்களில் பதிவு செய்யும் முறையும், நூலக அமைப்பு முறைகளும் எழுதியவற்றைப் பேணும் சாதனங்களாக அமைந்து விட்டன. செவிப்புல ஆட்சியைவிடக் கட்புலன் ஆட்சி மிகுந்துவிட்டது. எவற்றையும் நினைவில் நிறுத்தித் "தலைக்கணம் செய்ய வேண்டிய இன்றியமையாமை இல்லாது போய்விட்டது. கல்வி முறையிலும் நெட்டுருச் செய்து நினைவிலிருத்த வேண்டிய முறை தளர்ந்து விட்டது. தகர்ந்தே போய்விட்டது என்று கூடச் சொல்லலாம். வாய்விட்டுப் படித்தல் குறைந்து வாய்க்குட்