பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.3 புதுவை (மை)க் கவிஞர் படித்தல் செல்வாக்கு அடைந்துவிட்டது. ஒரே அறையில்-பெரிய மண்டபத்தில்-பலர் இருக்கைகளில் அமர்ந்து 'கல்லாவின்புடை அமர்ந்துள்ள தென்முகக் கடவுள்போல் நூல்களிலும் வார, பிறை, திங்கள் இதழ் களிலும் ஆழங்கால் பட்ட நிலையில் அமர்ந்திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருப்பதை நூலகங் களில் காணலாம். இந்தச் சூழ்நிலையில் செய்யுள் வடிவம் செல்வாக்கிழந்து உரைநடை வடிவம் உயர்ந்தோங்கிவிட்டது. மேனாட்டார் வருகைக்குப் பிறகு உரைநடை இலக்கியங்களில் புதினம், சிறுகதை, கட்டுரை வகைகள் ஆகியவை தோன்றி வளர்ந்து, நிலைத்து நின்றுவிட்டன. இந்த நிலையில் கவிதையும் உரைநடையில் ஏன் இயங்கக் கூடாது என்ற வினாவும் எழத் தொடங்கிவிட்டது. மேனாட்டு இலக்கியப் புரட்சி களின் தாக்கமும் ஆங்கிலக் கல்வியின் வாயிலாக நமக்குக் கிடைத்துள்ளது. விட்மெணிண் வசன கவிதை முயற்சிகள் எஸ்ராபவுண்டு, டி. எஸ். எலியட்டு போன்றவர்களால் ஆங்கில மொழியில் கையாளப் பெற்றன. கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் இத்தாலி ஸ்பானிஷ், செர்மென், இரவிய மொழிகளின் இலக்கண மரபில் கணிசமான நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்படலாயின. நந்தமிழ் மொழியிலும் பாரதியாரின் காலம் முதல் (இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம்) புதிய பாணியில் கவிதைகள் முகிழ்க்கத் தொடங்கின. தொடக்கக் காலத்தில் யாப்பு முறைகட்குக் கட்டுப்படாமல் கவிதை உணர்வுகட்குச் சுதந்திரமான எழுத்துவடிவம் கொடுக்கும் படைப்பு முயற்சி வசன கவிதை என்றே வழங்கப் பெற்றுள்ளது. மேலை நாடுகளில் நடைபெற்ற கவிதைச் சோதனைகள் பாரதியார் காலம் முதல் தமிழகத்திலும் நடைபெற்றன. வால்ட்விட்மெனின் கவிதைப் பொரு