பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 95 என்று இந்நிலையைக் காட்டுவர். புலவர் அடைத்த கவிதைத் திருக்கதவைக் கவிஞர் வந்து திறக்கும் புது முயற்சியாகத் தமிழ் வசன கவிதை முயற்சிகள் அமைந்தன என்பது இக் கவிஞர் பெற வைக்கும் குறிப்பாகும். புதுக் கவிதையின் மூலம் : 'ரிஷிமூலம்’, நதிமூலம்’, இவற்றைக் காண்பது எளிதல்ல என்று கூறுவதில் உண்மை உண்டு. ஆனால் புதுக் கவிதையின் மூலத்தை ஒருவாறு அறுதியிட்டு விடலாம். கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் தமது எல்லாக் கவிதைகளும் பண்டிருந்து வரும் கவிதைகளினின்றும் சிறிதோ முற்றிலுமோ மாறுபட்ட படைப்புகளாக அமைந்த காரணத்தால் அவற்றைப் புதுக் கவிதை-நவ கவிதை-என்றே குறிப்பிடுகின்றார். சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற்புதிது சோதிமிக்க நவ கவிதை." என்று அவர் தமது கவிதைகளைப் பற்றிப் பேசுவதைக் காணலாம்: 'எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோர்க்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள தயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்' என்று பாரதியார் தமது "பாஞ்சாலி சபதத்திற்கு எழுதியுள்ள் முகவுரைப் பகுதியாலும்-அவருக்குப் புதுக் கவிதையில்' 5. பாரதியார். வேங்கடேசபூபதி - (2)-3.