பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 புதுவை (மை)க் கவிஞர் இருந்த பேரவா புலனாகும். இத்தகையதோர் அவாவைக் கொண்ட கவிஞரே புதுக் கவிதை'யைத் தோற்றுவித்த தந்தையுமாகின்றார். . முன்னோடியாகவும் திகழ் கின்றார். தமது கவிதையுணர்வுகளையும், அகத்தெழுச்சி களையும், கனவுகள், கற்பனைகள், முற்போக்கு எண்ணங் கள், சமுதாயப் பார்வைகள், நாட்டு நிலைகள் ஆகிய அனைத்தையும் மரபு நிலைகெடாத, எளிய, இனிய, புதிய புதிய யாப்புகளில், சந்த நயங்கட்கு உட்படும் பல்வேறு புதிய வடிவங்களில் வெளிப்படுத்திய கவிஞர் பெருமான் இலக்கண விதிகட்குக் கட்டுப்படாத வடிவத் திலும் கவிதைகளைப் படைக்க முயன்றுள்ளார். இந்த முயற்சிகளின் விளைவுகளே வசன கவிதைகளாகும். இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் வசனத்தை மீறியவை யாயினும், கவிதையின் முழுத்தன்மையை எய்தாத ஒரு முயற்சியாகவே படைத்துள்ளார் என்று கருதலாம். இதிலுள்ள முதற் கவிதை; இவ்வுலகம் இனியது; இதிலுள்ள வான் இனிமை யுடைத்து; காற்றும் இனிது. தி இனிது. நீர் இனிது, நிலம் இனிது.” ஞாயிறு நன்று; திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது. என்று தொடங்குகின்றது. இது வசனமா? கவிதையா? என்பதை ஆராய்வோம். அதற்கு முதலாக ரசிகமணி டி. கே. சியின் கவிதை பற்றிய கருத்தினைக் காண்போம் கவி(தை) என்றால் இன்னதென்று ೧FTುಖ தற்கு இலக்கணம் கிடையாது. உலகத்தில் எங்கும். கிடையாது. யாப்பியல் இந்த விஷயத்தில் எந்த