பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 97 உதவியும் புரியவில்லை. வெண்பா இது, விருத்தம் இது என்று ஏதோ சொல்லலாம். ஆனால் கவிதை) இன்னதென்று சொல்லவே முடியாது. ஒரு பாஷை யோடும் அதிலுள்ள சிறந்த கவிதை)களோடும் உண்மையான ஆர்வத்தோடு படாடோபத்தை யெல்லாம் தூரத்தே விட்டுவிட்டு நெடுநாள் பழகி வருவோமானால் அது தெரிய வரலாம்." இதிலிருந்து யாப்பமைதி வேறு, கவிதையின் வடிவ அமைதி வேறு என்பதை டி. கே. சி அவர்களின் கருத்து தெளிவுறுத்துகின்றது. எனவேதான் வசன கவிதையைப் படைப்போர் இலக்கணம் வேறு, கவிதை வேறு என்பதை உணர்ந்து யாப்பைப் புறக்கணித்துள்ளனர். கவிதைக்கும் வசனத்திற்கும் சொற்கள் பொது என்பது உண்மை. ஆயினும், கவிதையின் சுருதி வேறு; வசனத்தின் சுருதி வேறு. தீ இனிது’ என்பதில் இனிது’ என்ற சொல் சுவையை (நாவின் செயலை)ச் சார்ந்தது. தீ சுடும் என்பதில் சுடும்’ என்ற சொல் ஊற்றுணர்வைத் (நொப்புலச் செயலைத்) தெரிவிக் கின்றது. தீ சுடும்’ என்ற தொடர் அறிவோடு பேசு கின்றது. தீ இனிது’ என்ற தொடர் உணர்வோடு பேசுகின்றது. எனவே, முன்னது வசனம்; பின்னது கவிதை. சொற்றொடர் வெறும் செய்தியை மட்டிலும் சொல்லாமல், உவமையைப்போல் உணர்விடம் பேசு மானால் கவிதை பிறந்துவிடுகின்றது. தீ இல்லை என்றால் ஊண் ஏது? உலகு என்பது நிலைபெற முடியுமா? அதனால்தான். தீ இனிது’ என்பதை உணர்ச்சி ஒப்புக்கொள்ளுகின்றது. ஒரு பொறிக்கு உரித்தான தொழிலைப் பிறிதொரு பொறியின் மீதேற்றிக் கவிதையின் சிறப்பைக் கூட்டும் கற்பனை உத்தி இங்குக் 6 டி. கே. சி. மொழிகள்-தீபம், செப்டம்பர்-1972. 7–7