பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 39 இது ‘வசன கவிதை' என்ற திருநாமமும் பெற்றது போலும்! மேலும், தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல், சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல், கண்ணிர்த் துளிவர உள் ளுருக்குதல்.’ என்ற கவிஞனின் குறிக்கோளையும் நிலைபெறச் செய்து விடுகின்றது. கவிதையைப் படிப்போரிடமும் மந்திர ஆற்றல் போன்ற ஒருவித ஆற்றலால் இந்த உணர்வுகளை எழுப்பி விடுகின்றது. மேற்கூறியவற்றை அறிந்த பிறகும் வசனமும் கவிதை யும் ஒன்றாகுமா என்ற வினா நம்மிடையே எழத்தான் செய்கின்றது. இதற்கு ஒர் அமைதி கூற வேண்டியது இன்றியமையாததாகின்றது. உண்மையில் கவிதையும் வசனமும் ஒன்றாகா. கவிதை வசனமாகாது என்பது மட்டிலும் உறுதி. வசனம் (Prose), செய்யுள் (Verse) ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்டது கவிதை, வசனம் அல்லது உரைநடை, செய்யுள் ஆகியவை கவிதை இயங்கும் தளங்களாகும். இவை இரண்டும் கவிதையின் புறவடிவங் களாகும்; கவிஞன் கையாளும் இருவிதச் சாதனங்களா கும். இந்த இரண்டு சாதனங்களில் (Devices) மட்டிலும், கவிதையைக் காண இயலாது. இவற்றைக் கவிஞன் கையாளும் முறையில்தான் கவிதை தென்படும். படைப் புத்திறம் மிக்க கவிஞனுக்குச் செய்யுளில் கவிதை கிடைக்கும்; வசனத்திலும் கிடைக்கும். இன்று மரபுக் 8. பாஞ்சாலி சபதம்-154.