பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் IOI பாரதிதாசனும் சுரதாவும் எண்சீர் விருத்தத்தில் கவிதை கள் படைத்தாலும் அவற்றின் வெளியீட்டுத் தன்மை வேறுபட்டிருப்பதைக் காணலாம். அங்ங்னமே திருமங்கை யாழ்வாரின் திருத்தாண்டகப் பாசுரங்களும் அப்பர் பெரு மானின் திருத்தாண்டகப் பாடல்களும் பாணியில் ஒன்று போலத் தோன்றினாலும் அவற்றின் வெளியீட்டுத் தன்மை வேறுபட்டிருப்பது புலனாகும். இவ்வாறு உணர்த்தும் முறை கவிஞனின் மனவெளிக்குப் புலப்படும் சூக்குமத் தன்மை கொண்டது. எனவேதான் புதுக்கவிதை யின் உருவம் திருமலை நாயக்கர் மகால் தூணைப்போலத் து.ாலமாகத் தெரிவதில்லை என்று எழுதினார் மீரா. பாரதியின் வசன கவிதைகள் யோக நிலையில் கண்ட பேரின்பக் கனவுகள். இப் பகுதியிலுள்ள ஒவ்வொரு கவிதையும் இவ்வுண்மையைப் பறை சாற்றுகின்றது. வேத காலத்து ரிஷிகளைப்போலவே அழகு பொருந்திய அருட் சொற்களில் காட்சிகள்' என்ற பகுதி வருணிக்கப் பெறுகின்றது. பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும் ? பயனின்றி உரைப்பாளே ? பாராய் நெஞ்சே!" என்று கூறியவரல்லவா? பாடல்கள் வசனத்திலிருந்தாலும் திரு மூலர் சொற்களின் வேகத்தைப் பெறுகின்றன. பொருள் கனத்தையும் தாங்கிச் செல்லுகின்றன. இதனால் பாரதியார் சித்தர்கள் நிலைக்கு உயருகின்றார். யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்' என்று தன்னம்பிக் கையுடனும் சொல்லிக் கொள்ளுகின்றார். பாரதியார் முதன் முதலில் வசன கவிதைகளை எழுதினவாாதலால் 10. தோ. பா. பேதை நெஞ்சே-5 11. பாரதி அறுபத்தாறு-1