பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 புதுவை (மை)க் கவிஞர் வசன கவிதையின் தந்தையாகின்றார்; வசன கவிதை புதுக்கவிதை பிறக்கக் காரணமாக இருந்ததால் வசன கவிதை' என்ற பாரதியின் மகள் (சேய்) புதுக் கவிதையின் தாயாகின்றாள். ஆகவே பாரதியார் புதுக்கவிதையின் பிதாமகன் (பாட்டன்) ஆகின்றார், இறுவாய்: பெரியோர்களே, இன்று நீயூடனின் ஏழு வண்ணங் களடங்கிய கதிரவன் ஒளியைக்காண்பதுபோல் ஏழு கோணங்களில் ஞானக் கதிரவனாகிய சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளிலுள்ள கருத்துகளை ஏழு கோணங்களில் காட்ட முயன்றேன். என் மனத்திலுள்ள கருத்துகளை ஏதோ ஒரு வகையில் வடித்துக் காட்டினேன். காட்டாதவை ஏராளமாக உள்ளன. எழுத்து வலைக்குள் அகப்பட்டவை இவையே. இவற்றால் எளிய நடையே சிறந்த கவிதைக்கு அழகும் பொலிவும் ஊட்டும் என்ற உண்மையை மெய்ப்பித்தவர் இவரே என்றும், தற்காலக் கவிஞர்கள் தம் காலத்து வாழ்க்கையையும் கவிதைப் பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்று காட்டின வர் இக் கவிஞர் கோமானே என்றும், பழமையிலிருந்து புதுமைக்கு மாறிக்கொண்டிருக்கும் தமிழரின் அறிவின் ஒளிக்கு ஒர் உருவமும், இதயத்தின் ஒலிக்கு ஓர் இசைப் பண்பையும் அளித்துக் கவிதை புனைந்தவர் இக்கவி நாயகனே என்றும் தெளிந்தோம். இதனை விளக்கும் முறையில் ஆ ! பாரதி புதிய தமிழுக்குப் போடப்பட்ட பிள்ளையார் சுழி...' 12. பாரதி ஓர் பிள்ளையார் சுழி (வாலி. பொய்க் கால் குதிரைகள்)