பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் * {}3 என்று புதுக் கவிஞரின் கூற்று முக்காலும் உண்மை என்பதையும் அறிகின்றோம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இம் மாபெரும் கவிஞரின் பெருமையை மதிப்பிட்டால், புவியனைத்தும் போற்றிடவான் புகழ் படைத்துத் தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லை எனும் வசை யென்னால் கழிந்த தன்றே." என்று அவரே பெருமிதத்துடன் கூறிக்கொள்வது முக்காலும் உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை என்பது வெள்ளிடைமலை. எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்." என்று சொன்ன தனிப்பெரும் கவிஞருக்குத்தான் இவ்வாறு சொல்லும் திராணி இருக்கும். பவணந்தியாரும், தன்னைப் புகழ்தலும் தகும்புல வோர்க்கே." என்று இதற்கு விதி வகுத்துத் தந்துள்ளாரன்றோ? 13. தனிப் பாடல்கள்-வேங்கடேச எட்டையர் பூபதி(2)-2 14. பாரதி அறுபத்தாறு-18 15. நன்னூல்-59