பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 3 லானேன். அறிவியலை அனுபவித்துக் கொண்டிருந்த என்னைத் திசை திருப்பித் தமிழுக்கு வரச் செய்தவை இவர்தம் பாடல்களே. இதனால் வித்துவான், எம். ஏ., பிஎச். டி. வரை படிக்கச் செய்து தமிழையே என் பிழைப் பிற்கு வழியாக அமையச் செய்தன. பாரதியார் நூற் றாண்டில் (1) பாரதீயம், (2) கண்ணன் பாட்டுத்திறன், (3) குயில்பாட்டு - ஒரு மதிப்பீடு, (4) பாஞ்சாலி சபதம் - ஒரு நோக்கு என்ற நான்கு நூல்களை வெளியிட்டு அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினேன். -குருவிக்குத் தகுந்த இராமேசுவரம் போல ஐந்தாறு ஆண்டுகட்குப் பிறகு அவர் பாடல்களைப் பயிலும் போது புதிய சிந்தனைகள் எழுகின்றன. இன்று தேசியகவி’ எனப் போற்றப் பெறும் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் எனக்குப் புதுவைக் கவிஞராகத் தோன்றுகின்றார்; தம் வாழ்க்கையில் கணி சமான பகுதியைப் புதுவையில் கழித்து தேச பக்தியின் கனலைத் துாண்டியவரல்லவா? பண்டிதர்களிடம் சிக்கித் தவித்த பைந்தமிழைப் பாமர மக்களின் சொத்தாகவும் செய்த மாபெருங் கவிஞராகவும் திகழ்வதால் அவர் எனக்குப் புதுமைக் கவிஞராகவும் காணப்படுகின்றார். இன்றைய பொழிவில் அவரை சர் ஐசாக் நியூட்டன் சூரிய ஒளியில் காணும் ஏழு நிறமாலை போல் (Spectrum) ஏழு நோக்கில் காண முயல்கின்றேன். அவை (1) பாட்டுக்கு ஒரு புலவன், (2) நாடு, மொழிப்பற்றாளர், (3) கல்விச் சிந்தனையாளர், (4) வைணவச் செல்வர்,(5) சக்திதாசர், (6) சமரச நோக்கர், (7) புதுக்கவிதை நாயகர் என்ற தலைப்புகளாகும். இத் தலைப்புகளில் அவரை நோக்கினாலும் ஏழு நிறமுள்ள சூரிய ஒளி வெண்மை நிறமாகத் தோன்றுவதுபோல, இவரும் இவர் தம் பாடல்கள் மூலம் பாரதியாராக-பரந்த நோக்குள்ள பாவலராக-பண்பாட்டின் கொடுமுடியாக இத்தனைக்கு மேலாக ஒரு மாமனிதராகக் காணப்படுவதை அறியலாம்.